12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் பிப்ரவரி 22, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 22 ம் தேதி, சனிக்கிழமையான இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய பஞ்சாங்கம் :
குரோதி வருடம், மாசி 10 ம் தேதி சனிக்கிழமை
காலை 10.46 வரை நவமி, பிறகு தசமி திதி உள்ளது . மாலை 03.22 வரை கேட்டை நட்சத்திரமும், பிறகு மூலம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.31 வரை மரணயோகம், பிறகு சித்தயோகம் உள்ளது.
நல்ல நேரம்: காலை 07.30 முதல் 08.30 வரை; மாலை - 09.30 முதல் 10.30 வரை
கெளரி நல்ல நேரம் : காலை 10.30 முதல் 11.30 வரை; மாலை 09.30 முதல் 10.30 வரை
ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை
குளிகை - காலை 6 முதல் 07.30 வரை
எமகண்டம் - பகல் 01.30 முதல் மாலை 3 வரை
சந்திராஷ்டமம் - பரணி, கிருத்திகை
இன்றைய ராசிபலன் :
மேஷம் - உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்ல வேண்டும். வாகன பயணத்தில் கவனம் வேண்டும். நண்பர்களிடம் விட்டுக் கொடுத்து செல்லவும். குடும்பத்தில் பொறுப்புக்கள் அதிகரிக்கும். எந்த ஒரு செயலையும் சிந்தித்து செய்ய வேண்டும். மனதில் இனம் புரியாத குழப்பம் ஏற்படும். அனுபவம் நிறைந்த நாளாக இருக்கும்.
ரிஷபம் - எடுக்கும் காரியங்கள் சாதகமாகும். உத்தியோகத்தில் பாராட்டு கிடைக்கும். கடன் தொடர்பான நெருக்கடிகள் குறையும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சமூக பணிகளில் செல்வாக்கு உயரும். சுபகாரிய முயற்சிகள் கைகூடும். தம்பதிகளுக்கு இடையே புரிதல் உண்டாகும். புதிய முயற்சிகள் சாதகமாகும். விருப்பங்கள் நிறைவேறும் நாள்.
மிதுனம் - உடன் பிறந்தவர்களால் நன்மை ஏற்படும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பார்த்த வாய்ப்புகள் சாதகமாகும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். தொழில் வளர்ச்சி திருப்திகரமாக இருக்கும். காரியத்தில் இருந்த எதிர்ப்புகள் விலகும்.
கடகம் - பிள்ளைகளுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். தோற்றப்பொலிவு அதிகரிக்கும். வாழ்க்கை துணை வழியில் ஆதரவுகள் கிடைக்கும். மனதில் நினைத்த காரியங்கள் நினைத்த படி நிறைவேறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். செயல்களில் இருந்த ஆர்வமின்மை நீங்கும். உயர்வு நிறைந்த நாளாக இருக்கும்.
சிம்மம் - பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். சிந்தனை போக்கில் தெளிவு உண்டாகும். கல்விப் பணிகளில் உயர்வு ஏற்படும். கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். புதிய வேலை கிடைக்கும். உறவினர்களால் லாபம் உண்டாகும்.
கன்னி - மறதி பிரச்சனைகள் குறையும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சிறு தூர பயணங்களால் மாற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இடமாற்றங்கள் சாதகமாகும். அக்கம் பக்கத்தினரின் ஆதரவு கிடைக்கும். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சொத்து விவகாரத்தில் எதிர்பார்ப்பு நிறைவேறும் அமைதி நிறைந்த நாளாக இருக்கும்.
துலாம் - உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். சிந்தனைகளில் தெளிவு பிறக்கும். பயணங்கள் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வழக்குகளில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். பொருளாதாரத்தில் ஏற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உடன் இருப்பவர்களை புரிந்து கொள்வீர்கள்.
விருச்சிகம் - செயல்பாடுகளில் கவனம் வேண்டும். பேச்சுக்களில் நிதானம் வேண்டும். மறைமுக நெருக்கடிகளால் மாற்றம் ஏற்படும். சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். வியாபாரத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சுமாராக இருக்கும். கவனமுடன் இருக்க வேண்டும். ஆதரவு நிறைந்த நாளாக இருக்கும்.
தனுசு - உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்ல வேண்டும். மற்றவர்களிடம் அளவுடன் இருப்பது நல்லது. எதிர்பாராத அலைச்சல்கள் ஏற்படும். ஆடம்பர சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வியாபார பயணங்களில் புதிய அனுபவம் ஏற்படும். பெருமைகள் உயரும் நாளாக இருக்கும்.
மகரம் - வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதில் இருந்த கவலைகள் நீங்கி, புத்துணர்ச்சி பிறக்கும். உடன் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். கலைதுறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சுபம் நிறைந்த நாளாக இருக்கும்.
கும்பம் - தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வியாபாரத்தில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். பூர்வீக வீட்டை மாற்றும் எண்ணம் அதிகரிக்கும். உறவினர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். சமூக கண்ணோட்டத்தில் மாற்றம் ஏற்படும். செலவுகள் அதிகரிக்கலாம். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
மீனம் - குடும்ப தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வதந்திகளை பொருட்படுத்தாமல் செயல்பட வேண்டும். முக்கிய முடிவுகளில் பொறுமை அவசியம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். அலுவலகம் தொடர்பாக பயணங்கள் ஏற்படும். வியாபாரத்தை விரிவு செய்ய நினைப்பீர்கள். புகழ் நிறைந்த நாளாக இருக்கும்.