12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் பிப்ரவரி 19, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

vanitha
Feb 19, 2025,10:18 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 19 ம் தேதி, புதன்கிழமையான இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.


இன்றைய பஞ்சாங்கம் :


குரோதி வருடம், மாசி 07 ம் தேதி புதன்கிழமை

காலை 06.13 வரை சஷ்டி, பிறகு சப்தமி திதி உள்ளது . காலை 09.27 வரை சுவாதி நட்சத்திரமும், பிறகு விசாகம் நட்சத்திரமும் உள்ளது. நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.


நல்ல நேரம்: காலை 09.30 முதல் 10.30 வரை; மாலை - 01.30 முதல் 02.30 வரை

கெளரி நல்ல நேரம் : காலை 10.30 முதல் 11.30 வரை; மாலை 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை

குளிகை - காலை 10.30 முதல் பகல் 12 வரை 

எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை 


சந்திராஷ்டமம் - உத்திரட்டாதி, ரேவதி


இன்றைய ராசிபலன் :




மேஷம் -  சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உறவினர்களால் மகிழ்ச்சி ஏற்படும். வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும். சுப செய்திகள் கிடைக்கும். அலைச்சலுடன் ஆதாயமும் ஏற்படும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். நன்மைகள் அதிகரிக்கும்.


ரிஷபம் - மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். உடல் இருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். எதிர்பாராத சில திருப்பங்கள் ஏற்படும். வெற்றி நிறைந்த நாளாக இருக்கும். புதிய அனுபவங்கள் கிடைக்கும்.


மிதுனம் - புது விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். தான, தர்மங்கள் செய்வீர்கள். பிடிவாத பேச்சுக்களை குறைத்து கொள்வது நல்லது. உடன் பிறந்தவர்களால் உதவிகள் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். சிந்தனைகளில் இருந்த குழப்பங்கள் நீங்கும். வியாபாரத்தில் நிதானத்துடன் செயல்பட வேண்டும். 


கடகம் -  பொருளாதார நிலை சுமாராக இருக்கும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடு தோன்றும். வேலைகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். உறவினர்கள் வருகை உண்டாகும். விட்டுக் கொடுத்து செல்வதால் மன அமைதி ஏற்படும். 


சிம்மம் -  கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் சாதகமாக அமையும். பிடிவாத போக்கினை குறைத்துக் கொள்ள வேண்டும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் சில நுட்பங்களை அறிந்து கொள்வீர்கள். அமைதியான நாள்.


கன்னி -  குடும்பம் பற்றிய எண்ணம் அதிகரிக்கும். உறவினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வாகன பயணத்தில் நிதானம் வேண்டும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் திறமைகள் வெளிப்படும். மகிழ்ச்சி அதிகரிக்கும். 


துலாம் -  புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்பட வேண்டும். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்தினரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் கவனம் வேண்டும். தொழிலில் புதிய சிந்தனைகள் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் போது கவனம் வேண்டும்.


விருச்சிகம் -  பேச்சுக்களின் அனுபவம் வெளிப்படும். வெளியூர் பயணங்கள் கைகூடும். வீட்டில் சிறு மாற்றங்களை செய்வீர்கள். பணி மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வழக்குகளில் திருப்பம் ஏற்படும். செயல்பாடுகளில் இருந்த வந்த தடைகள் நீங்கும். புகழ் உயரும். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.


தனுசு - உயர் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். அரசு பணிகளில் இருந்த இழுபறியான சூழல் மாறும். வியாபார விரிவாக்க எண்ணங்கள் தோன்றும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் மூலம் முன்னேற்றம் உண்டாகும். லாபகரமான நாளாக இருக்கும்.


மகரம் -  குடும்பத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிநாட்டு பயணம் செல்ல திட்டமிடுவீர்கள்.ஆன்மிக பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களிடம் பொறுமையுடன் நடந்து கொள்ள வேண்டும். அடுத்தவர்களின் விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்வும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யும் போது கவனம் வேண்டும்.


கும்பம் -   சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். தெய்வீக சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் திறமைக்கு ஏற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மகான்களின் தரிசனம் கிடைக்கும். சமூகத்தில் புகழ் உண்டாகும். அமைதியுடன் செயல்பட வேண்டிய நாள். 


மீனம் - திடீர் பயணங்கள் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்ல வேண்டும். கொடுக்கல், வாங்கலில் கவனமுடன் இருக்க வேண்டும். மற்றவர்களிடம் தேவையற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ள வேண்டும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்க வேண்டும். புதிய அனுபவங்கள் ஏற்படும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.