12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 19, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ம் தேதி, சனிக்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய பஞ்சாங்கம் :
விசுவாவசு வருடம், சித்திரை 06 ம் தேதி சனிக்கிழமை
தேய்பிறை சஷ்டி. கரி நாள். பகல் 3 வரை சஷ்டி திதியும், பிறகு சப்தமி திதியும் உள்ளது. இன்று காலை 07.19 வரை மூலம் நட்சத்திரமும் பிறகு பூராடம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.01 வரை அமிர்தயோகமும் பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம்: காலை 10.30 முதல் 11.30 வரை; மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் : 12.30 முதல் 01.30 வரை ; மாலை 09.30 முதல் 10.30 வரை
ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை
குளிகை - காலை 6 முதல் 07.30 வரை
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை
சந்திராஷ்டமம் - கிருத்திகை, ரோகிணி
இன்றைய ராசிபலன் :
மேஷம் - உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். தந்தை வழியில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். ஆன்மிக பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரத்தில் அலைச்சல் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் ஆதாயம் ஏற்படும். ஆதாயம் நிறைந்த நாள்.
ரிஷபம் - மனதில் குழப்பம் ஏற்படும். புதிய முயற்சிகளில் யோசித்து ஈடுபடவும். உத்தியோகத்தில் கெடுபிடிகள் அதிகரிக்கும். கடன் தொடர்பான செயல்களில் கவனம் வேண்டும். தேவையற்ற செலவுகள் ஏற்படும். நினைத்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்படும். அமைதி வேண்டிய நாள்.
மிதுனம் - நீண்ட நாள் உறவினர்களின் சந்திப்பு புத்துணர்ச்சியை தரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கடன் பிரச்சனைகள் குறையும். வியாபாரம் தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். முன்னேற்றம் ஏற்படும். வரவு நிறைந்த நாளாக இருக்கும்.
கடகம் - சமயோசிதமாக பேசி காரியத்தை முடிப்பீர்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் சாதமாகும். மனை தொடர்பான கடன் உதவிகள் கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். வெற்றி நிறைந்த நாளாக இருக்கும்.
சிம்மம் - எதிர்காலம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். ஆடம்பர செலவுகளை குறைப்பீர்கள். நண்பர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். உத்தியோகத்தில் எதிர்பாராத பொறுப்புகளால் அலைச்சல் உண்டாகும். மனதில் புதுவிதமான கனவுகள் உண்டாகும். சுபமான நாளாக இருக்கும்.
கன்னி - உறவுகள் வழியில் அனுசரித்து செல்லவும். எதிர்பாராத வரவுகள் உண்டாகும். புரட்சிகரமான சிந்தனைகள் மனதில் தோன்றும். எதிலும் சிக்கனமாக செயல்படவும். அலைச்சல்கள் உண்டாகும். கூட்டு தொழிலில் சாதகமான வாய்ப்புகள் அமையும். லாபம் நிறைந்த நாளாக இருக்கும்.
துலாம் - எதிர்காலம் தொடர்பாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்லவும். பயணங்கள் குறித்த சிந்தனை அதிகரிக்கும். ஆலோசித்து முடிவுகள் எடுப்பீர்கள். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரத்தில் திட்டமிட்டு செயல்படுவது நல்லது.
விருச்சிகம் - புதிய ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். சுப காரியங்கள் அனுகூலமாக முடியும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வெளியூரிலிருந்து மகிழ்ச்சயான செய்தி கிடைக்கும். தன வரவு குறித்த சிந்தனைகள் அதிகரிக்கும். உதவினர்களின் ஆதரவு கிடைக்கும். இரக்கம் வேண்டிய நாள்.
தனுசு - பொருளாதாரம் தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். மனதில் சில கவலைகள் தோன்றி மறையும். தம்பதிகளுக்கும் அனுசரித்து செல்லவும். பலம், பலவீனங்களை அறிவீர்கள். பல வேலைகளை பார்க்க வேண்டிய சூழல் ஏற்படும். சுகம் நிறைந்த நாளாக இருக்கும்.
மகரம் - வழக்கு விஷயங்களில் புரிதல் ஏற்படும். இரவு நேர பணிகளில் ஆதாயம் கிடைக்கும். பயணம் தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். தனவரவுகளில் இருந்து வந்த நெருக்கடிகள் குறையும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். அமைதி நிறைந்த நாள்.
கும்பம் - கலைப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களில் லாபம் அதிகரிக்கும். வெளியூர் பயண சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் உயர்வு ஏற்படும். புதுவிதமான இடங்களுக்கு சென்று வருவீர்கள். செயல்களில் இருந்த சோர்வுகள் குறையும். உதவிகள் கிடைக்கும்.
மீனம் - தொழில் ரீதியான எண்ணம் சாதகமாகும். எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். ஆன்மிக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களால் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்காலம் தொடர்பாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். முயற்சிகளில் அனுபவம் ஏற்படும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.