12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - டிசம்பர் 18, 2024...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2024 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ம் தேதி, புதன்கிழமையான இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய பஞ்சாங்கம் :
குரோதி வருடம், மார்கழி 03 ம் தேதி புதன்கிழமை
இன்று பகல் 12.54 வரை திரிதியை, அதற்கு பிறகு சதுர்த்தி. அதிகாலை 03.31 வரை புனர்பூசம், பிறகு பூசம். நாள் முழுவதும் சித்தயோகம்
நல்ல நேரம்: காலை 09.15 முதல் 10.15 வரை; மாலை 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் : காலை 10.15 முதல் 11 வரை; மாலை 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை
குளிகை - காலை 10.30 முதல் பகல் 12 வரை
எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை
சந்திராஷ்டமம் - கேட்டை, மூலம்
இன்றைய ராசிபலன் :
மேஷம் - ஏற்றம் இறக்கம் நிறைந்த நாளாக இருக்கும். கடந்த கால நினைவுகளால் மனதில் கவலைகள் தோன்றி மறையும். வேலையில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். மேலதிகாரிகளுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்வது நல்லது. மனதில் நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்வது நல்லது.
ரிஷபம் - சிறப்பான நாளாக இருக்கும். சிலவரின் ஆதரவு மனதிற்கு நம்பிக்கையை கொடுக்கும். எதிலும் பொறுமையுடன் நடந்து கொள்வது சிறப்பு. தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்குவீர்கள். நண்பர்களிடம் இருந்து உதவிகள் கிடைக்கலாம்.
மிதுனம் - மனதில் சில வேதனைகள் வந்து அழுத்தும். சூழ்நிலைகள் சாதகமற்றதாக இருக்கும். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் பதவி உயர்விற்கான வாய்ப்புகள் அமையும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
கடகம் - பேச்சுக்களால் வம்புகளில் சிக்கிக் கொள்ளலாம். கவனம் வேண்டும். தன்னம்பிக்கை அதிகரிக்கள். படிப்பு, எழுத்து போன்றவற்றில் ஆர்வம் அதிகரிக்கும். வருமான வாய்ப்புகள் உருவாகும். வியாபாரிகளுக்கு நல்ல நாளாக இருக்கும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும்.
சிம்மம் - குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள். வாழ்க்கை துணையின் உடல் நலனில் அக்கறை காட்டுவது அவசியம். பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும். வரவு- செலவுகளில் கவனம் செலுத்த வேண்டும். இல்லா விட்டால் பண நெருக்கடிகளை சந்திக்க வேண்டி இருக்கலாம். போட்டி தேர்வுகளில் வெற்றி கிடைக்கும்.
கன்னி - தேவையற்ற கோபத்தை தவிர்க்க வேண்டும். தொழிலில் ஈடுபாடு அதிகரிக்கும். லாப வாய்ப்புகள் பெருகும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். எதிலும் கவனமும், நிதானமும் இருந்தாலும் வாய்ப்புக்கள் கை நழுவி போகாமல் இருக்கும்.
துலாம் - முக்கிய காரியங்களில் வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். வாழ்க்கை துணையுடன் நேரத்தை செலவிடுவீர்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். மனதில் புது விதமான தைரியமும், உற்சாகமும் பிறக்கும்.
விருச்சிகம் - அதிகாரத்தில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். வேலையில் உங்களின் திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பேச்சில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். புதிய தொழில் துவங்கலாம். யாருக்கும் கடன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
தனுசு - மன அமைதி கிடைக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பது மனதிற்கு மகிழ்ச்சியை தரும். பேச்சில் பொறுமையை கையாள வேண்டும். வேலையில் மாற்றம் செய்ய நினைப்பீர்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும்.
மகரம் - பொருளாதார நிலை குழப்பத்தை ஏற்படுத்தி, மன அமைதி பாதிக்கப்படலாம். தாயாரின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் உதவியால் வருமான வளர்ச்சி ஏற்படும். வீட்டில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். பிள்ளைகளின் ஆதரவு கிடைக்கும்.
கும்பம் - தன்னம்பிக்கை குறைந்து காணப்படும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தாயாரின் உடல் நலனில் அக்கறை காட்ட வேண்டும். வாழ்க்கை துணையின் உடல் நலம் மற்றும் தொழிலில் நேரடி கவனிப்பு பாதிப்புகளை குறைக்கும். பண வரவு சுமாராக இருக்கும்.
மீனம் - முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். நிலம், வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்பு ஏற்படும். குடும்ப வசதி பெருகும். செலவுகளும் அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். வேலை பளு அதிகரிக்கும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்