12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் பிப்ரவரி 17, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

vanitha
Feb 17, 2025,09:28 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 17 ம் தேதி, திங்கட்கிழமையான இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.


இன்றைய பஞ்சாங்கம் :


குரோதி வருடம், மாசி 05 ம் தேதி திங்கட்கிழமை

சுபமுகூர்த்த நாள். அதிகாலை 01.59 வரை சதுர்த்தி, பிறகு பஞ்சமி திதி உள்ளது . காலை 04.18 வரை அஸ்தம் நட்சத்திரமும், பிறகு சித்திரை நட்சத்திரமும் உள்ளது. காலை 04.18 வரை அமிர்தயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.


நல்ல நேரம்: காலை 06.30 முதல் 07.30 வரை; மாலை - 04.30 முதல் 05.30 வரை

கெளரி நல்ல நேரம் : காலை 09.30 முதல் 10.30 வரை; மாலை 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை

குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை 

எமகண்டம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை 


சந்திராஷ்டமம் - சதயம், பூரட்டாதி


இன்றைய ராசிபலன் :




மேஷம் -  நண்பர்களின் சந்திப்பால் மனம் மகிழ்ச்சி அடையும். எந்த செயலிலும் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். தம்பதிகளுக்கும் நெருக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் உயர்வு ஏற்படும். சிந்தனைகளில் மாற்றம் ஏற்படும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். புதிய இலக்குகளை நிர்ணயிப்பீர்கள். பணவரவு அதிகரிக்கும்.


ரிஷபம் - சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்காலம் தொடர்பாக சில முடிவுகளை எடுப்பீர்கள். திடீர் பயணங்கள் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். நெருக்கமானவர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். தம்பதிகளுக்குள் புரிதல் அதிகரிக்கும். நட்பு வட்டாரம் விரிவடையும். எதிலும் கவனமுடன் இருப்பது நல்லது.


மிதுனம் - புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள். உறவுகளால் ஏற்பட்ட நெருக்கடிகள் குறையும். ஆடம்பரமான செலவுகளை குறைத்து சேமிப்பை அதிகப்படுத்துவீர்கள். ஆன்மிக பணிகளில் ஆர்வம் ஏற்படும். வியாபாரத்தில் மாற்றம் செய்வீர்கள். பொழுதுபோக்குகளில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகத்தில் விவேகத்துடன் செயல்பட வேண்டும். 


கடகம் -  குடும்பத்தில் முக்கிய நிகழ்ச்சிகள் நடக்கும். பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். பொருளாதார தேவைகள் நிறைவேறும். அறிமுகம் இல்லாதவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். இரவு பயணங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.


சிம்மம் -  பொருளாதார நெருக்கடிகள் குறையும். கடன் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நண்பர்கள் வழியில் அனுகூலம் ஏற்படும். தாயின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சிறு தூர பயணங்களால் மகிழ்ச்சி ஏற்படும். ஆசைகள் நிறைவேறும்.


கன்னி -  புதிய நட்புகள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக் கொடுத்து செல்லவும். எதிர்பாராத செலவுகள் ஏற்படும். உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்ல வேண்டும். நெருக்கடியாக இருந்த பிரச்சனைகள் நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் கால தாமதம் ஏற்படும். எதிலும் அமைதி காக்க வேண்டிய நாள்.


துலாம் -  மகிழ்ச்சியான சிந்தனைகளால் சுறுசுறுப்புடன் காரணப்படுவீர்கள். சுபகாரியம் தொடர்பான பயணங்கள் ஏற்படும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கை துணை பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். சேமிப்புக்களை அதிகரிக்கும் எண்ணம் தோன்றும். தயக்கம் இல்லாமல் செயல்படுவது நல்லது. சிந்தனையில் மாற்றங்கள் ஏற்படலாம். 


விருச்சிகம் -  புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளிடம் பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும். எதிர்பாராத பயணங்கள் ஏற்படலாம். தொழிலில் சிறு மாற்றங்கள் செய்வீர்கள். திறமை வெளிப்படும். பொறுமை அவசியம்.


தனுசு - தொழிலில் முன்னேற்ற வாய்ப்புகள் ஏற்படும். வருமானத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். சேமிப்பு தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். ஆர்வம் நிறைந்த நாளாக இருக்கும். கலை துறையில் இருப்பவர்களுக்கு திறமைக்கு ஏற்ப வாய்ப்புகள் கிடைக்கும்.


மகரம் -  கலகலப்பான பேச்சுக்களால் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். புதுவிதமான சிந்தனை உருவாகும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு ஏற்படும். உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பார்வை தொடர்பான பிரச்சனை குறையும். வெளி வட்டாரங்களில் மதிப்பு அதிகரிக்கும். 


கும்பம் -   உத்தியோகத்தில் மறைமுக திறமைகள் வெளிப்படும். வரவை காட்டிலும் செலவு அதிகமாக இருக்கும். உடன் இருப்பவர்களுடன் சிறு வாக்குவாதங்கள் ஏற்படலாம். கடன் தொடர்பான பிரச்சனைகள் சிறிது குறையும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் உயர்வு ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் அனுசரித்து செல்ல வேண்டும்.


மீனம் - முக்கிய முடிவுகளில் பொறுமை வேண்டும். நினைத்த காரியங்கள் இழுபறியாகி நிறைவேறும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். மனதில் குழப்பங்கள் தோன்றி மறையும். தேவையற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்வது நல்லது. எதிலும் விவேகத்துடன் செயல்பட வேண்டும்.நிதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.