12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - டிசம்பர் 17, 2024...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2024 ஆம் ஆண்டு டிசம்பர் 17 ம் தேதி, செவ்வாய்கிழமையான இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய பஞ்சாங்கம் :
குரோதி வருடம், மார்கழி 02 ம் தேதி செவ்வாய்கிழமை
இன்று பகல் 01.11 வரை துவிதியை, அதற்கு பிறகு திரிதியை. அதிகாலை 03.17 வரை திருவாதிரை, பிறகு புனர்பூசம். அதிகாலை 03.17 வரை சித்தயோகம், பிறகு காலை 06.22 வரை அமிர்தயோகம், அதற்கு பிறகு சித்தயோகம் உள்ளது.
நல்ல நேரம்: காலை 07.45 முதல் 08.45 வரை; மாலை 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் : காலை 04.45 முதல் 05.45 வரை; மாலை 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை
சந்திராஷ்டமம் - அனுஷம், கேட்டை
இன்றைய ராசிபலன் :
மேஷம் - செலவுகள் அதிகரிக்கலாம். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகளை முடிப்பீர்கள். உடல் நலனில் அக்கறை காட்ட வேண்டும். ஆரோக்கியத்தை பாதுகாக்கும் பயிற்சிகளில் ஈடுபடுவது நல்லது. எதிர்காலம் குறித்த புதிய திட்டங்களை வகுப்பீர்கள்.
ரிஷபம் - பண விஷயங்களில் சற்று எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். நண்பர்களுடன் வெளியூர் சென்று வர திட்டமிடுவீர்கள். குடும்பத்தில் சில மாற்றங்களை செய்ய முயற்சிப்பீர்கள். சிலருக்கு மன அழுத்தத்தால் தூக்கம் பாதிக்கப்படலாம். உங்களின் யோசனைகள் நண்பர்களிடம் பாராட்டை பெறும்.
மிதுனம் - நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பணியில் இருந்த வந்த தடைகள் நீங்கும். சுற்றுலா சென்று வர வாய்ப்புகள் அமையும். குடும்ப உறுப்பினர்கள் மீது அக்கறை காட்டுவீர்கள். வாழ்க்கை துணையுடன் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
கடகம் - உடல் நலனில் அதிகம் அக்கறை காட்ட வேண்டிய நாள். ஆக்கப்பூர்வமாக சில முடிவுகளை எடுக்க முயற்சிப்பீர்கள். குடும்பத்தில் சில பிரச்சனைகள் தலைதூக்க வாய்ப்புள்ளது. மனதில் குழப்பங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. முக்கியமான நபரை சந்திக்கும் சூழல் உருவாகலாம்.
சிம்மம் - உடல்நிலை குறித்த கவலைகள் வந்து போகும். நிலுவையில் இருக்கும் பணத்தை பெறுவதற்கு சிரமப்பட வேண்டி இருக்கும். வாழ்க்கை துணையின் ஆதரவு மனதிற்கு இதம் தரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். சமூக பணிகளில் தீவிரமாக பணியாற்ற வேண்டி இருக்கும்.
கன்னி - நீண்ட கால பிரச்சனைகள் முடிவுக்கு வரும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பண விஷயங்களில் யாரையும் நம்பி பொறுப்பை ஒப்படைக்காதீர்கள். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உறவுகளிடத்தில் வாழ்க்கை துணையை விட்டுக் கொடுக்காமல் நடந்த கொள்ளுங்கள். இது குடும்பத்தில் அன்பை பலப்படுத்தும்.
துலாம் - உடல்நிலை கவலை தருவதாக இருக்கும். உரிய மருத்துவம் எடுத்துக் கொள்வது சிறப்பு. கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். வேலையில் அழுத்தம் குறையும். ஆன்மிக தலங்களுக்கு சென்று வருவீர்கள். குடும்ப வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் தீரும். வாழ்க்கை துணையுடன் அன்பு அதிகரிக்கும்.
விருச்சிகம் - முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் அமையும். உடல் நலனில் அதிக கவனம் செலுத்த வேண்டி இருக்கும். குடும்பத்தில் சில பதற்றமான சூழல் உருவாகலாம். பொறுமையை கடைபிடியுங்கள். வாழ்க்கை துணையுடன் வெளி இடங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு அமையும்.
தனுசு - பணத்தை சேமிப்பதில் கவனம் செலுத்துவீர்கள். புதிய முதலீடுகளில் நாட்டம் அதிகரிக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வருமானம் அதிகரிப்பதற்கான புதிய வாய்ப்புகள் உருவாகும். அலுவலகத்தில் கூடுதல் பணிகளை செய்ய வேண்டி இருக்கும். வாழ்க்கை துணையுடனான அன்பு அதிகரிக்கும்.
மகரம் - குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. உடல்நலனில் சிறு சிறு பிரச்சனைகள் வந்து போகலாம். பயணங்கள் மேற்கொள்ள இது சிறப்பான நேரமாகும். உங்களைச் சுற்றி போட்டிகள் அதிகரிக்கும். சமூக பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும்.
கும்பம் - பண வரவு நன்றாக இருக்கும். அன்புக்குரியவர்களுடன் நெருக்கம் அதிகரிக்கும். உணவு பழக்கத்தில் அக்கறை காட்ட வேண்டும். இலக்குகளில் கவனம் செலுத்த வேண்டும். வெற்றிகளை அடைய கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை.
மீனம் - சில சாதகமான மாற்றங்கள் ஏற்படலாம். பழைய முதலீடுகள் மூலம் லாபம் பெறுவீர்கள். பொருளாதார நிலை உயரும். குடும்ப உறப்பினர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்பட்டு, அதனால் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. பேச்சில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். கோபத்தை தவிர்க்க வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்