12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - டிசம்பர் 16, 2024...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2024 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ம் தேதி, திங்கட்கிழமையான இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய பஞ்சாங்கம் :
குரோதி வருடம், மார்கழி 01 ம் தேதி திங்கட்கிழமை
இன்று பகல் 01.54 வரை பிரதமை, அதற்கு பிறகு துவிதியை. அதிகாலை 03.37 வரை மிருகசீரிஷம், பிறகு திருவாதிரை. நாள் முழுவதும் சித்த யோகம் உள்ளது.
நல்ல நேரம்: காலை 06.15 முதல் 07.15 வரை; மாலை 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் : காலை 09.15 முதல் 10.15 வரை; மாலை 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை
குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை
சந்திராஷ்டமம் - விசாகம், அனுஷம்
இன்றைய ராசிபலன் :
மேஷம் - உடன் இருப்பவர்களிடம் பொறுமை காக்க வேண்டிய நாள். மற்றவர்களுக்காக சில பொறுப்புக்களை ஏற்க வேண்டி வரும். பொழுதுபோக்கான விஷயங்களில் மனம் செல்வதால் வேலைகள் தாமதப்படும். உறவினர்கள் வருகையால் வீட்டில் கலகலப்பான சூழல் நிலவும். பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.
ரிஷபம் - உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். இதுவரை பேசாமல் இருந்த நபர்கள் இன்று தேடி வந்து பேசுவார்கள். உத்தியோகத்தில் அமைதியான போக்கே காணப்படும். பணம் பல வழிகளிலும் வந்து சேரும்.
மிதுனம் - சுப நிகழ்ச்சிகள் குறித்த முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். யாருக்கும் ஜாமின் கையெழுத்து போட வேண்டாம். பண விஷயத்தில் சிக்கனம் அவசியம். எதிர்பாராத சந்திப்புகள் ஏற்படும். உடற்பயிற்சி, யோகா போன்ற விஷயங்களில் மனம் ஆர்வம் காட்டும். மருத்துவ துறையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம்.
கடகம் - குடும்ப உறுப்பினர்களுடன் வாக்குவாதங்கள் வந்து போகும். வெளியூர் பயணங்கள் தள்ளி போகலாம். சகோதர வழியில் உதவிகள் கிடைக்கும். தொலைப்பேசி மூலம் நல்ல செய்திகள் வரும். மனத்திற்கு பிடித்த நபர்களின் சந்திப்பு நிகழும்.
சிம்மம் - பெரியோர்களின் ஆசி கிடைக்கும். அலுவலக விஷயமாக வெளியூர் பயணம் மேற்கொள்ளலாம். நண்பர்கள் கை கொடுப்பார்கள். குடும்பத்தில் அமைதியான ச6ழல் நிலவும், நீண்ட நாள் எண்ணங்கள் நிறைவேறும். உடல் நலனில் முன்னேற்றம் ஏற்படும்.
கன்னி - சுப காரியங்கள் தாமதமாகலாம். கடன் பிரச்சனைகள் தீரும். உத்தியோகத்தில் சாதகமான விஷயங்கள் நடைபெறலாம். உடன் பிறந்தவர்கள் உதவ முன் வருவார்கள். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள். யாருக்கும் வாக்குறுதி தர வேண்டாம்.
துலாம் - எதிலும் எச்சரிக்கையுடன் இருப்பது நலம். குடும்ப உறுப்பினர்களுடன் சண்டை சச்சரவுகள் வரலாம். விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. நீண்ட நாள் எண்ணங்கள் நிறைவேறும். அக்கம் பக்கத்தினரின் உதவிகள் கிடைக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
விருச்சிகம் - இறை வழிபாட்டின் மூலம் நிம்மதி காண வேண்டிய நாள். காரியத் தடைகள் ஏற்படலாம். புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் வேண்டாம். மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
தனுசு - உறவினர்கள் தேடி வந்து பாசம் காட்டுவார்கள். கொடுக்கல் வாங்கலில் கவனம் அவசியம். உடல் நலனில் அக்கறை காட்ட வேண்டும். எதிரிகள் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்பார்கள். பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள்.
மகரம் - தங்களின் வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். உறவுகளால் நன்மை உண்டு. தோற்றத்தில் பொலிவு அதிகரிக்கும். அலுவலகத்தில் மற்றவர்களால் மதிக்கப்படுவீர்கள். அரசியலில் ஆர்வம் அதிகரிக்கும். நண்பர்கள் கை கொடுப்பார்கள்.
கும்பம் - தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வெளிநாட்டு வியாபாரத்தை விருத்தி செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.
மீனம் - கொங்கல் வாங்கலில் கண்டிப்புடன் இருக்க வேண்டும். வாழ்க்கை துணையுடன் வாக்குவாதம் ஏற்படலாம். அமைதி காக்க வேண்டிய நாள். உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். செலவுகள் அதிகரிக்கும். சிக்கனம் அவசியம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்