12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் பிப்ரவரி 15, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ம் தேதி, சனிக்கிழமையான இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய பஞ்சாங்கம் :
குரோதி வருடம், மாசி 03 ம் தேதி சனிளக்கிழமை
நாள் முழுவதும் திரிதியை. நாள் முழுவதும் உத்திரம் நட்சத்திரம் உள்ளது. காலை 06.33 வரை சித்தயோகமும், பிறகு மரணயோகம் உள்ளது.
நல்ல நேரம்: காலை 10.30 முதல் 11.30 வரை; மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் : காலை 12.30 முதல் 01.30 வரை; மாலை 09.30 முதல் 10.30 வரை
ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை
குளிகை - காலை 6 முதல் 07.30 வரை
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை
சந்திராஷ்டமம் - அவிட்டம்
இன்றைய ராசிபலன் :
மேஷம் - மனதில் புதுவிதமான கற்பனைகள் அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகளால் சேமிப்பு குறையும். வியாபாரம் தொடர்பான பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். செயல்பாடுகளில் இருந்து வந்த தடைகள் நீங்கும். உறவினர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். மாற்றம் நிறைந்த நாளாக இருக்கும்.
ரிஷபம் - பொறுப்புகள் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சிலருக்கு சாதகமான இடமாற்றங்கள் ஏற்படலாம். வியாபாரம் தொடர்பான பயணங்கள் ஏற்படலாம். நன்மைகள் அதிகரிக்கும். புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள்.
மிதுனம் - அலைச்சலுடன் ஆதாயம் இருக்கும் நாள். மறதி தொடர்பான சிக்கல்கள் தோன்றி மறையும். கல்வியில் ஆர்வமின்மை ஏற்படலாம். மாற்றவான அணுகுமுறையால் போட்டிகளை சமாளிப்பீர்கள். வாகனங்களால் செலவுகள் ஏற்படலாம். உறவினர்களால் மன வருத்தம் ஏற்படலாம். வியாபாரத்தில் திடீர் திருப்பங்கள் ஏற்படலாம்.
கடகம் - வியாபாரத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் நன்மைகள் ஏற்படும். சுப காரிய பேச்சுவார்த்தைகள் கை கூடும். வெளியூர் தொடர்பான பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும்.
சிம்மம் - வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வரவுகளை அதிகரிப்பது தொடர்பான சிந்தவை அதிகரிக்கும். பெரியோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆன்மிக பயணம் குறித்த சிந்தனைகள் அதிகரிக்கும். வாழ்க்கை துணை வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய முதலீடுகளில் கவனம் வேண்டும்.
கன்னி - தொழில் தொடர்பான புதிய சிந்தனைகள் அதிகரிக்கும். உறவினர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். ஆடம்பரமான பொருட்களின் மீது ஆசை அதிகரிக்கும். அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்க வேண்டும். பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். புதிய விஷயங்களில் ஆர்வம் ஏற்படும்.
துலாம் - குடும்பத்தில் அனுசரித்து செல்ல வேண்டும். வெளி உணவுகளை தவிர்க்க வேண்டும். உடன் பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரம் சுமாராக இருக்கும். தெய்வ வழிபாடு அமைதியை தரும். மருத்துவ செலவுகள் ஏற்படலாம். முன்னேற்றம் பெற முயற்சிகளை அதிகரிக்க வேண்டும்.
விருச்சிகம் - தந்திரமாக செயல்பட்டு நினைத்ததை முடிப்பீர்கள். உறவினர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உயரதிகாரிகளின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை வெற்றி கொள்வீர்கள். அலுவலகத்தில் உங்களின் முக்கியத்துவம் அதிகரிக்கும். எதிர்பாராத திடீர் யோகங்கள் ஏற்படும். பணவரவு அதிகரிக்கும்.
தனுசு - தந்தை வழி உறவுகள் மூலம் உயர்வு ஏற்படும். பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். இறை நம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். கூட்டாளிகளால் அலைச்சல் ஏற்பட்டாலும் ஆதாயம் கிடைக்கும். விலகி சென்றவர்கள் பற்றிய நினைவுகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்த தாமதங்கள் நீங்கும்.
மகரம் - மனதில் இருந்த குழப்பங்கள் குறையும். தம்பதிகள் இடையே ஒற்றுமை அதிகரிக்கும். தள்ளிப் போன சில விஷயங்கள் சாதகமாக முடியும். கடன் பிரச்சனைகள் தீரும். திட்டமிட்ட பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் ஆதரவான சூழ்நிலை ஏற்படும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.
கும்பம் - குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். எதிர்பார்த்த பணிகள் முடிவதில் தாமதம் ஏற்படும், எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். குழப்பமான மனநிலை ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் கவனம் வேண்டும். உத்தியோக பணிகளில் அலட்சி இன்றி செயல்படுவது நல்லது. உணவு பழக்கங்களில் கவனம் வேண்டும்.
மீனம் - உத்தியோகத்தில் திறமை வெளிப்படும். விருப்பங்கள் நிறைவேறும். கலகலப்பான பேச்சுக்களால் நட்பு வட்டம் விரிவடையும். புதிய நபர்களால் ஆதாயம் ஏற்படும். உடன் பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். உழைப்பிற்கு ஏற்ற ஆதாயம் கிடைக்கும். கல்வி தொடர்பான பணிகளில் ஆர்வம் ஏற்படும்.