12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - டிசம்பர் 15, 2024...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

vanitha
Dec 15, 2024,09:59 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2024 ஆம் ஆண்டு டிசம்பர் 15 ம் தேதி, ஞாயிற்றுக்கிழமையான இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.


இன்றைய பஞ்சாங்கம் :


குரோதி வருடம், கார்த்திகை 30 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை

பெளர்ணமி. கிரிவலம் செல்ல ஏற்ற நாள். இன்று மாலை 03.13 வரை பெளர்ணமி, அதற்கு பிறகு பிரதமை. காலை 04.26 வரை ரோகிணி, பிறகு மிருகசீரிஷம். காலை 04.26 வரை அமிர்தயோகம், பிறகு சித்தயோகம் உள்ளது.


நல்ல நேரம்: காலை 07.45 முதல் 08.45 வரை; மாலை 03.15 முதல் 04.15 வரை

கெளரி நல்ல நேரம் : காலை 01.45 முதல் 02.45 வரை; மாலை 01.30 முதல் 02.30 வரை

ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 வரை

குளிகை - பகல் 3 முதல் மாலை 04.30 வரை

எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை


சந்திராஷ்டமம் -  சுவாதி, விசாகம்




இன்றைய ராசிபலன் :


மேஷம் - தன்னம்பிக்கை அதிகரிக்கும். அலுவகத்தில் உங்களின் முயற்சிகளுக்கு பாராட்டு கிடைக்கும். தனித்திறமைகள் வெளிப்படும். கணவன்-மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பணவரவு இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் சாதமான பலன்கள் கிடைக்கும்.


ரிஷபம் - வேலையில் தவறுகள் நடக்க வாய்ப்புள்ளதாக எதிலும் கூடுதல் கவனமுடன் செயல்பட வேண்டும். வாழ்க்கை துணையுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனக்குறைவால் பணத்தை இழக்க நேரிடலாம். ஆரோக்கியத்தில் சளி, இருமல் போன்ற பாதிப்புக்கள் ஏற்படலாம்.


மிதுனம் - மனதில் குழப்பங்கள் அதிகரிக்கும். வேலைகளில் அதிக கவனமுடன் செயல்படுவதால் தவறுகள் ஏற்படாமல் தடுக்கலாம். வீட்டில் வீண் சண்டை, சச்சரவுகள் ஏற்படலாம். வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. உடல் நலனில் அக்கறை காட்ட வேண்டும்.


கடகம் -  மனதில் பதற்றத்துடன் காணப்படுவீர்கள். மனவிரக்தி தோன்றி மறையும். சக ஊழியர்களுடன் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் வளர்ச்சியில் தடை ஏற்படலாம். பணப்புழக்கம் குறையும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் கை நழுவி போகலாம். ஆரோக்கியத்தில் தோல் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படலாம்.


சிம்மம் - சாதக பலன்கள் தரும் நாளாக இருக்கும். இருந்தாலும் அலுவலக பணிகளில் கவனமாக இருக்க வேண்டும். பணிச்சுமை அதிகரிக்கும். குடும்பத்துடன் வெளியிடங்களுக்கு சென்று வருவீர்கள். போதிய அளவிற்கு பணவரவு இருக்கும். 


கன்னி - சுமாரான நாளாக இருக்கும். மனதை மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் வைத்துக் கொள்ளுங்கள். எதையும் எதிர்பார்க்காமல் உழைத்தால் வெற்றி கிடைக்கும். பணிகளை திட்டமிட்டு செய்வீர்கள். வாழ்க்கை துணையுடன் பிரச்சனைகள் ஏற்படலாம். வீட்டை மாற்றி அமைக்க நினைப்பீர்கள். உடல்நலனில் அக்கறை தேவை.


துலாம் - பொறுமையை சோதிக்கும் சம்பவங்கள் நடக்கலாம். வேலைப்பளு அதிகரிக்குள். குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படும். செலவுகள் அதிகரிக்குள். சிலருக்கு பற்றாக்குறையால் கடன் வாங்கும் நிலை ஏற்படலாம். கண்கள் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.


விருச்சிகம் - நெருக்கடியான சூழல் ஏற்படலாம். பதற்றத்துடன் காணப்படுவீர்கள். வேலைகளை உரிய நேரத்தில் செய்து முடிக்க முடியாமல் போகலாம். வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பணவரவு இருந்தாலும் செலவுகளும் இருக்கும். 


தனுசு - பயனுள்ள சில முடிவுகளை எடுப்பீர்கள். பணியிடத்தில் சவாலான சூழல்கள் ஏற்படலாம். வேலைகளில் சில தவறுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. வாழ்க்கை துணையுடனான உறவு நன்றாக இருக்கும். பணவரவு அதிகரிக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.


மகரம் - எதிலும் அமைதி காப்பது நல்லது. எதிர்மறை எண்ணங்கள் தோன்றி மறையும். பணிச்சுமை அதிகரிக்குள். வேலைகளில் தடைகளை சந்திக்க நேரிடும். வாழ்க்கை துணையிடம் பொறுமையை கடைபிடிப்பது நல்லது. விட்டுக் கொடுத்து போவதால் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம். பணத்தட்டுப்பாடு ஏற்படலாம். 


கும்பம் - சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பொறுமை காப்பது நல்லது. நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். அலுவலகத்தில் அனைவரிடமும் நல்லுறவை வளர்த்துக் கொள்ள வேண்டும். செலவுகள் அதிகரிக்கலாம். சிலருக்கு கடன் வாங்கும் சூழ்நிலையும் ஏற்படலாம்.


மீனம் - மற்றவர்களிடம் அகந்தை போக்காக நடந்து கொண்டு பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். வாழ்க்கை துணையுடன் அனுசரித்து செல்ல வேண்டும். பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. பணம் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பதை தவிர்க்க வேண்டும்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்