12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 15, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

vanitha
Apr 15, 2025,10:20 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ம் தேதி, செவ்வாய்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம். 


இன்றைய பஞ்சாங்கம் :


விசுவாவசு வருடம், சித்திரை 02ம் தேதி செவ்வாய்கிழமை

காலை 10.07 வரை துவிதியை திதியும், பிறகு திரிதியை திதியும் உள்ளது. இன்று நாள் முழுவதும் விசாகம் நட்சத்திரம் உள்ளது. நாள் முழுவதும் மரணயோகம் உள்ளது.


நல்ல நேரம்: காலை 10.30 முதல் 11.30 வரை; மாலை - 04.30 முதல் 05.30 வரை

கெளரி நல்ல நேரம் : காலை 01.30 முதல் 02.30 வரை; மாலை 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை

குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை

எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை


சந்திராஷ்டமம் -  ரேவதி


இன்றைய ராசிபலன் :




மேஷம் - மனதில் குழப்பம் தோன்றி மறையும். முயற்சியில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடியால் மங்கடம் அதிகரிக்கும். உடன் இருப்பவர்களுடன் பிரச்சனை ஏற்படலாம். எதிர்பார்ப்பு தாமதமாக நிறைவேறும். மற்றவர்களை அனுசரித்து செல்லவும். நன்மை நிறைந்த நாள்.


ரிஷபம் - மனதில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். ஆரோக்கியம் சிறப்படையும். நேர்மறை சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய துறையில் ஆர்வம் ஏற்படும். சகோதரர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். மனதில் இருந்த கவலைகள் குறையும். உத்தியோகத்தில் அமைதியான சூழல் உண்டாகும். உதவி கிடைக்கும் நாளாக இருக்கும். 


மிதுனம் - வாழ்க்கை துணையுடன் அனுசரித்து செல்வது நல்லது. எதிர்ப்புகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். நெருக்கடியான பிரச்சனைகள் குறையும். வருமானம் போதுமானதாக இருக்கும். வாகன பராமரிப்பில் கவனம் வேண்டும். அரசு வழியில் எதிர்பார்த்த காரியம் கைகூடும். நட்பு விரிவடையும் நாளாக இருக்கும்.


கடகம் - மனதளவில் குழப்பங்கள் தோன்றி மறையும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் தடைகள் ஏற்பட்டு நீங்கும். எதிலும் பற்றற்ற தன்மை உண்டாகும். நுட்பமான விஷயங்களில் புரிதல் ஏற்படும். பண வரவுகள் திருப்திகரமாக இருக்கும். நன்மை நிறைந்த நாளாக இருக்கும். 


சிம்மம் - பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் குறையும். சுபகாரியம் தொடர்பான செயல்களில் தாமதம் உண்டாகும். உறவினர்கள் உதவியால் பிரச்சனைகள் தீரும். எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. புதிய முயற்சிகளில் உடன் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சிந்தனை அதிகரிக்கும் நாள்.


கன்னி - வியாபாரத்தில் புதிய வழிகள் பிறக்கும். எதிர்ப்புகளை வெற்றி கொள்ளும் சாமர்த்தியம் ஏற்படும். எதிர்பாராத பணவரவு ஏற்படும். மனதில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். திட்டமிட்ட பணிகளை திட்டமிட்டபடி முடிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும். வாழ்க்கையில் நம்பிக்கை ஏற்படும். சிக்கல்கள் மறையும்.


துலாம் -  எதிர்பாராத சில உதவிகள் சாதகமாகும். பொருட்சேர்க்கை உண்டாகும். நண்பர்களிடம் அனுசரித்து செல்லவும். வாக்குறுதிகளை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் அமைதி ஏற்படும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் சாதகமாகும். மனதில் இருந்து வந்த கவலைகள் குறையும். வரவு நிறைந்த நாள்.


விருச்சிகம் - எதிர்பார்த்த சில காரியங்கள் தள்ளிப் போகும். திடீர் பயணம் உண்டாகும். எந்த செயலை செய்வதற்கு முன் யோசித்து செய்வது நன்மை தரும். கவனக்குறைவால் பணிகளில் தடுமாற்றம் ஏற்படும். அரசு வழியில் ஆதாயம் ஏற்படும். இணைய பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பரிசு கிடைக்கும் நாள்.


தனுசு - மனதில் தேவையற்ற குழப்பம் உண்டாகும். திடீர் பயணத்தால் சோர்வு ஏற்படும். நினைத்த பணிகளில் அலைச்சல் அதிகரிக்கும். எதிர்ப்புகளை சமாளிப்பதற்கான மனப்பக்குவம் உண்டாகும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். குடும்ப நலனில் அக்கறை தேவை. முயற்சிகளில் தடுமாற்றம் ஏற்படலாம். பொறுமை வேண்டும்.


மகரம் - சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பிற இன மக்கள் ஆதரவாக செயல்படுவார்கள். எதிர்பார்த்த வரவுகள் வந்து சேரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும். பொது வாழ்வில் செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரத்தில் தடைகள் விலகும். விருத்தி நிறைந்த நாளாக இருக்கும்.


கும்பம் -  குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். ஆலயம் சார்ந்த திருப்பணிகளில் ஆர்வம் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் ஏற்படும். நேர்மறை சிந்தனைகள் அதிகரிக்கும். தொழில்நுட்பம் சார்ந்த செயல்பாடுகளில் தெளிவு பிறக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பாராட்டு கிடைக்கும் நாள்.


மீனம் - நினைத்த பணிகளை நிறைவேற்றுவதில் கால தாமதம் ஏற்படும். சிந்தவையிவ் போக்கில் மாற்றங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் பொறுப்பு அதிகரிக்கும். உடல் நிலையில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும். திடீர் செலவுகள் உண்டாகும். விவேகம் வேண்டிய நாள். வர்த்தக பணிகளில் கவனம் வேண்டும்.