12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - டிசம்பர் 14, 2024...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

vanitha
Dec 14, 2024,09:48 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2024 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ம் தேதி, சனிக்கிழமையான இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.


இன்றைய பஞ்சாங்கம் :


குரோதி வருடம், கார்த்திகை 29 ம் தேதி சனிக்கிழமை

இன்று மாலை 04.16 வரை சதுர்த்தசி, அதற்கு பிறகு பெளர்ணமி. காலை 04.56 வரை கிருத்திகை, பிறகு ரோகிணி. காலை 05.25 வரை சித்தயோகமும், பிறகு காலை 06.20 வரை மரணயோகமும், பிறகு அமிர்தயோகமும் உள்ளது.


நல்ல நேரம்: காலை 07.45 முதல் 08.45 வரை; மாலை 04.45 முதல் 05.45 வரை

கெளரி நல்ல நேரம் : காலை 10.45 முதல் 11.45 வரை; மாலை 09.30 முதல் 10.30 வரை

ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை

குளிகை - காலை 6 முதல் 07.30 வரை

எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை


சந்திராஷ்டமம் -  சித்திரை, சுவாதி


இன்றைய ராசிபலன் :




மேஷம் - மன குழப்பம் அதிகரிக்கும். தன்னம்பிக்கை குறையும். எதிலும் பொறுமையை கடைபிடிப்பது அவசியம். வியாபாரம் நல்ல முறையில் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். புதிய தொழில் துவங்குது தொடர்பான எண்ணங்கள் மனதில் அதிகரிக்கும்.


ரிஷபம் - மனம் பலவற்றையும் நினைத்து அலை பாய்ந்து கொண்டிருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பேச்சில் அமைதியை கையாள்வது நல்லது. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வேலை பளு அதிகரிக்கும். லாபம் அதிகரித்தாலும், கூடவே செலவும் அதிகரிக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.


மிதுனம் - மன மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். இருந்தாலும் தன்னம்பிக்கை சற்று குறைவாகவே இருகு்கும். தொழில் தொடர்பாக அலைச்சல் இருக்கும். வருமானம் அதிகரிக்கும்.


கடகம் -  மன நிம்மதி பாதிக்கப்படலாம். கல்வி பணிகளுக்காக வெளிநாடு செல்ல வாய்ப்புகள் உருவாகும். அதிகாரத்தில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். தொழிலில் விரிவுபடுத்துவீர்கள். வருமானம் அதிகரிக்கும்.


சிம்மம் - பேச்சில் இனிமை அதிகரிக்கும். ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழிலை விரிவுபடுத்த திட்டமிடுவீர்கள். லாபம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.


கன்னி - மன குழப்பத்துடன் காணப்படுவீர்கள். இனம் புரியாத கவலைகள், பயம் வந்து நீங்கும். கோபத்தை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் பதவி உயர்விற்கான வாய்ப்புகள் அமையும். இது வருமானத்திற்கான ஆதாரமாகவும் மாற வாய்ப்புள்ளது.


துலாம் - மனம் அடிக்கடி சோர்வடையும். தன்னம்பிக்கை குறையும். தந்தையின் உடல் நலனில் அக்கறை காட்ட வேண்டும். செலவுகள் அதிகரிக்கும். ஆன்மிக விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் சிரமங்கள் ஏற்படலாம். கடினமாக உழைக்க வேண்டி இருக்கும்.


விருச்சிகம் - அறிவு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். எதிலும் பொறுமையை கடைபிடிப்பது நல்லது. வியாபாரத்தில் வீண் செலவுகள் ஏற்படலாம். மற்றொரு புறம் வருமானமும் வரும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும்.


தனுசு - தன்னம்பிக்கை அதிகரிக்கும். நண்பர்களுடன் திடீர் சந்திப்பு ஏற்படும். நண்பர்கள் மூலம் தொழில் வாய்ப்புகள் தேடி வரும். பண வரவு அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அமையும்.


மகரம் - மனதில் அமைதியும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும். எதையும் சாதிக்கும் நம்பிக்கை அதிகரிக்குமள். புதிய திட்டங்கள் வகுப்பீர்கள். கடின உழைப்பு முன்னேற்றத்தை தரும். லாப பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.


கும்பம் - எதையும் நம்பிக்கையுடன் எதிர்கொள்வீர்கள். இருந்தாலும் எதிலும் சற்று நிதானத்துடன் இருக்க வேண்டும். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும்.


மீனம் - சற்று பதற்றத்துடன் காணப்படுவீர்கள். குடும்பத்துடன் புனித தலங்களுக்கு சென்று வரலாம். பேச்சுக்களின் நிதானத்தை கையாள்வது சிறப்பு. ஆன்மீக விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்