12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் மார்ச் 14, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

vanitha
Mar 14, 2025,09:40 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு மார்ச் 14 ம் தேதி, வெள்ளிக்கிழமையான இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.


இன்றைய பஞ்சாங்கம் :


குரோதி வருடம், மாசி 30 ம் தேதி வெள்ளிக்கிழமை

காரடையான் நோன்பு. ஹோலி பண்டிகை. பகல் 12.57 வரை பெளர்ணமி திதியும், பிறகு பிரதமை திதியும் உள்ளது . காலை 06.54 வரை பூரம் நட்சத்திரமும், பிறகு உத்திரம் நட்சத்திரமும் உள்ளது. நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது. 


நல்ல நேரம்: காலை 09.30 முதல் 10.30 வரை; மாலை - 5 முதல் 6 வரை

கெளரி நல்ல நேரம் : காலை 12.30 முதல் 01.30 வரை; மாலை 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை

குளிகை - காலை 07.30 முதல் 9 வரை

எமகண்டம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை


சந்திராஷ்டமம் -  திருவோணம், அவிட்டம்


இன்றைய ராசிபலன் :




மேஷம் -  எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். உத்தியோகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். பண வரவுகள் அதிகரிக்கும். புத்திசாலித்தனம் வெளிப்படும். மனதில் புதிய தைரியம் பிறக்கும். உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். 


ரிஷபம் - வியாபாரத்தில் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். சில மாற்றங்கள் மூலம் லாபங்கள் அதிகரிக்கும். சாதுர்யமான பேச்சுக்களால் இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். பெரியோர்களின் ஆலோசனைகள் தெளிவை கொடுக்கும். 


மிதுனம் - இனம் புரியாத சிந்தனைகள் மூலம் குழப்பங்கள் ஏற்படும். கோபம் இன்றி பொறுமையாக செயல்படவும். எதிர்பார்த்த சில உதவிகள் தாமதமாக கிடைக்கும். வியாபாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். அரசு பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். உடன் பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம்.


கடகம் - முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் ஏற்படும். பணிகளில் அசதிகள் ஏற்படும். மனதில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களுடன் வாக்குவாதங்களை தவிர்க்கவும். எதிலும் அலட்சியம் இன்றி செயல்படவும். முன்கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். கோப்புகளில் கவனம் வேண்டும்.


சிம்மம் - உத்தியோகத்தில் ஆர்வமின்மை ஏற்படும். மனதில் புதிய தேடல்கள் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகங்கள் மனதிற்கு நம்பிக்கையை தரும். எதிர்காலம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். உறவினர்கள் பற்றிய புரிதல்கள் ஏற்படும். தேவையற்ற செலவுகளை தவிர்க்க வேண்டும். லாபமான நாள்.


கன்னி - எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் மூலம் முன்னேற்றம் ஏற்படும். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். நட்பு நிறைந்த நாளாக இருக்கும்.


துலாம் -  நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பணியில் திடீர் மாற்றங்கள் ஏற்படும். உடன் பிறந்தவர்களிடம் விட்டுக் கொடுத்து செல்லவும். புதிய இலக்குகள் உண்டாகும். கடனை அடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். புதிய முயற்சிகள் ஈடேறும்.மனதில் மகிழ்ச்சி பிறக்கும்.


விருச்சிகம் - பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். வீட்டின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் மாற்றங்கள் ஏற்படும். மனதில் தன்னம்பிக்கையும் துணிச்சலும் அதிகரிக்கும். 


தனுசு - பேச்சுக்களால் ஆதாயம் உண்டாகும். புதிய விஷயங்களை கற்பதில் ஆர்வம் ஏற்படும். உழைப்புக்கு உண்டான முன்னேற்றம் ஏற்படும். உடன் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். கணவன்-மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். கவலைகள் மறையும் நாள். 


மகரம் - நிதானமான பேச்சுக்கள் மதிப்பை உருவாக்கும். எதிலும் கொள்கை பிடிப்பு தன்மை அதிகரிக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகங்கள் கிடைக்கும். பார்வை பிரச்சனை குறையும். எதிர்பாராத வரவுகள் ஏற்படும். பொறுமை வேண்டிய நாள். 


கும்பம் -  பழைய நினைவுகள் மூலம் குழப்பங்கள் தோன்றி மறையும். மனை தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் சிறுசிறு விவாதங்கள் தோன்றி மறையும். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதளவில் மாற்றத்தை தரும். பகை விலகும் நாள்.


மீனம் -  எண்ணிய பணிகளை அலைந்த முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். தகவல் தொடர்பு துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். திடீர் பயணங்களால் சோர்வுகள் ஏற்படும். மறைமுக போட்டிகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் குறையும்.