12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் பிப்ரவரி 12, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 12 ம் தேதி, புதன்கிழமையான இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய பஞ்சாங்கம் :
குரோதி வருடம், தை 30 ம் தேதி புதன்கிழமை
தை பெளர்ணமி, கிரிவலம் செல்ல ஏற்ற நாள். இரவு 08.12 வரை பெளர்ணமி, பிறகு பிரதமை. இரவு 08.24 வரை ஆயில்யம் நட்சத்திரமும், பிறகு மகம் நட்சத்திரமும் உள்ளது. நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.
நல்ல நேரம்: காலை 10.30 முதல் 11.30 வரை; மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் : காலை 01.30 முதல் 02.30 வரை; மாலை 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை
குளிகை - காலை 10.30 முதல் பகல் 12 வரை
எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை
சந்திராஷ்டமம் - பூராடம், உத்திராடம்
இன்றைய ராசிபலன் :
மேஷம் - உடல் ஆரோக்கியம் சுமாராக இருக்கும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீண் செலவுகளையும், ஆடம்பர செலவுகளையும் குறைப்பது நல்லது. வியாபாரம் தொடர்பான பயணங்கள் ஏற்படலாம். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பணத்தை சேமிப்பது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பணிகளில் தாமதங்கள் ஏற்படலாம்.
ரிஷபம் - பொருளாதார உயர்வு குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். எதிர்காலம் தொடர்பான முயற்சிகள் வெற்றி அடையும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். சிறு தூர பயணங்களால் மனதில் குழப்பங்கள் ஏற்படலாம். மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும்.
மிதுனம் - தம்பதிகள் இடையே நெருக்கம் அதிகரிக்கும். சில பிரச்சனைகளுக்கு திடீர் முடிவு எடுப்பீர்கள். தோற்றத்தில் மாற்றம் ஏற்படும். தடைப்பட்ட பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் சாதகமான வாய்ப்புகள் உருவாகும். அலுவலக பணிகளை விரைந்து முடிப்பீர்கள். எதிர்பாராத சில சிரமங்களால் மாற்றங்கள் ஏற்படும். அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும்.
கடகம் - எதிலும் நேர்மறை சிந்தனையுடன் செயல்படுவது நல்லது. வாழ்க்கை துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். எதிர்பாராத செலவுகள் ம6லம் சேமிப்புகள் கரையும். எதிலும் பொறுமையுடன் செயல்பட வேண்டும். நிதானமான போக்கு சாதகமான பலன்களை தரும். மற்றவர்கள் மீதான கருத்தில் கவனம் வேண்டும்.
சிம்மம் - புதிய மனிதர்களின் நட்பு உண்டாகும். ஆரோக்கியம் தொடர்பான செலவுகள் குறையும். போட்டியாக இருந்தவர்கள் மனம் மாறுவார்கள். சில அனுபவங்களில் மனதில் பக்குவம் ஏற்படும். உத்தியோகத்தில் சில மாற்றங்கள் ஏற்படலாம். வியாபாரம் தொவர்பான பயணங்கள் சாதகமாகும். விவேகத்துடன் செயல்பட வேண்டிய நாள்.
கன்னி - உத்தியோக பணிகளின் மற்றவர்களை அனசரித்து செல்ல வேண்டும். அரசு பணிகளில் ஆதாயம் ஏற்படும். புதிய முயற்சிகளில் சாதகமான சூழல் ஏற்படும். கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும். வியாபார பணிகளில் முதலீடுகளை அதிகரிப்பீர்கள். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். நேர்மை, திறமை வெளிப்படும் நாளாக இருக்கும்.
துலாம் - குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சமூகம் குறித்த புதிய கண்ணோட்டங்கள் பிறக்கும். செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும். பணிகளில் பொறுமையுடன் நடந்து கொள்வது தேவையற்ற சிக்கல்களை தவிர்க்க உதவும். வேலையாட்களிடம் நிதான போக்கை கையாள வேண்டும். சிக்கல்கள் மறையும் நாள்.
விருச்சிகம் - செயல்களில் இருந்த சோர்வுகள் குறையும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவதற்கான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் போக்கில் சில மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் சூழ்நிலைகளை அறிந்து மாற்றங்கள் செய்வது நல்லது. அலுவலகத்தில் முயற்சிக்கு ஏற்ற புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தான தர்ம காரியங்களில் ஆர்வம் ஏற்படும்.
தனுசு - செயல்பாடுகளில் ஆர்வமின்றி காணப்படுவீர்கள். தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்பட வேண்டும். வாக்குறுதிகள் அளிக்கும் போது யோசித்து பேச வேண்டும். வேலை தொடர்பான சில அவசர முடிவுகளை தவிர்க்க வேண்டும். உணவு விஷயங்களில் கவனமுடன் இருக்க வேண்டும். அமைதியுடன் செயல்பட வேண்டிய நாள்.
மகரம் - தம்பதிகளுக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வழக்கு பிரச்சனைகள் முடிவுகள் வரும். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். சுபகாரிய பேச்சுக்கள் சாதகமாகும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். மனதில் புதிய மாற்றங்கள் ஏற்படும்.
கும்பம் - பூர்வீக சொத்துக்களால் லாபகரமான வாய்ப்புகள் அமையும். சிந்தனை போக்கில் மாற்றம் ஏற்படும். நீண்ட கால முதலீடுகள் குறித்த சிந்தனை அதிகரிக்கும். வியாபாரத்தில் நிதானத்துடன் நடந்த கொள்ள வேண்டும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிலும் நிதானத்துடன் நடந்து கொள்ள வேண்டிய நாள். கலைஞர்களுக்கு திறமை வெளிப்படும்.
மீனம் - குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். சுற்றி இருப்பவர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். உறவினர்கள் வருகை உண்டாகும். பணியிடத்தில் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். வியாபாரத்தில் அலைச்சல்கள் ஏற்படும். போட்டி நிறைந்த நாளாக இருக்கும்.