12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - ஜனவரி 11, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2025 ஆம் ஆண்டு ஜனவரி 11 ம் தேதி, சனிக்கிழமையான இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய பஞ்சாங்கம் :
குரோதி வருடம், மார்கழி 27 ம் தேதி சனிக்கிழமை
கூடாரவல்லி. காலை 08.13 வரை துவாதசி, பிறகு திரியோதசி. பகல் 12.34 வரை ரோகிணி, பிறகு மிருகசீரிஷம் நட்சத்திரம் உள்ளது. காலை 06.32 வரை மரணயோகம், பிறகு பகல் 12.34 வரை அமிர்தயோகம், பிறகு சித்தயோகம்.
நல்ல நேரம்: காலை 08.15 முதல் 9 வரை; மாலை - மாலை 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் : காலை 10.30 முதல் 11.30 வரை; மாலை 09.30 முதல் 10.30 வரை
ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை
குளிகை - காலை 6 முதல் 07.30 வரை
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை
சந்திராஷ்டமம் - சுவாதி, விசாகம்
இன்றைய ராசிபலன் :
மேஷம் - பண வரவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் நல்லது நடக்கும். வேலைகள் தொடர்பாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டி இருக்கும். பெற்றோர்களின் உடல்நலனில் அக்கறை காட்ட வேண்டும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை அமையும்.
ரிஷபம் - ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். பிள்ளைகளால் நன்மை உண்டாகும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நட்பு வட்டாரம் விரிவடையும். இடம் வாங்கும் யோகம் கைகூடும். வாழ்க்கை துணையின் ஆதரவு கிடைக்கும். பழைய கடனை அடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.
மிதுனம் - எதிலும் கவனமாக இருக்க வேண்டும். குடும்ப செலவுகள் அதிகரிக்கும். தொழில் துவங்க திட்டமிடுவீர்கள். தம்பதிகளுக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். புதிய நபர்கள் உதவி செய்ய முன் வருவார்கள். உத்தேயாகத்தில் மரியாதை அதிகரிக்கும்.
கடகம் - உத்தியோகத்தில் பணிச்சுமை குறையும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வாகன பராமரிப்பு செலவு அதிகரிக்கும். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும். வழக்குகள் சாதகமாகும். சுப காரியம் கை கூடும். படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.
சிம்மம் - விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இறை வழிபாட்டில் நாட்டம் அதிகரிக்கும். தம்பதிகளுக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். பெண்களுக்கு சேமிப்பு அதிகரிக்கும். கை,கால் வலி வந்து சரியாகும்.
கன்னி - எடுத்த காரியங்கள் எளிதில் முடியும். நண்பர்களால் நன்மை ஏற்படும். அறிவாற்றல் அதிகரிக்கும். மாற்று மதத்தினரால் லாபம் ஏற்படும். குல தெய்வ வழிபாடு குடும்பத்தில் நிம்மதியை அதிகரிக்கும். பெற்றோரின் உடல் நலம் சீராக இருக்கும்.
துலாம் - சந்திராஷ்டமம் உள்ளதால் எதிலும் கவனமுடன் நடந்து கொள்ள வேண்டும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. இறை வழிபாட்டின் மூலம் நிம்மதி அடைய வேண்டிய நாள். பேச்சுக்களில் நிதானமும், கவனமும் அவசியம்.
விருச்சிகம் - எதிர்பாராத செலவுகள் ஏற்படும். வழக்குகள் தள்ளிப் போகும். பிள்ளைகளின் திறமை பளிச்சிடும். உத்தியோகத்தில் மரியாதை அதிகரிக்கும். மாற்று மருத்துவத்திற்கு மாறும் எண்ணம் ஏற்படும். உடல் பயிற்சியில் ஆர்வம் கூடும்.
தனுசு - எதிர்பார்த்த பணம் வந்து சேரும். பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். புதிய முயற்சிகள் கைகூடும். தொலை தொடர்புகள் பயனுள்ளதாக இருக்கும். தடைகள் விலகும். நட்புகளால் ஆதாயம் உண்டு. ஆன்மிகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
மகரம் - பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள். பழைய கடனை அடைக்க வழி பிறக்கும். வீட்டை விரிவுபடுத்த எண்ணுவீர்கள். பிரபலங்களின் அறிமுகம் ஏற்படும். கணவன் - மனைவி உறவு நன்றாக இருக்கும்.
கும்பம் - புதிய வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். சுப காரிய தடைகள் விலகும். பணப் பற்றாக்குறை நீங்க அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
மீனம் - வியாபாரத்தில் விற்பனை அதிகரிக்கும். பெண்களுக்கு மதிப்பு மரியாதை கூடும். பழைய வீட்டை புதுப்பிக்க நினைப்பீர்கள். உணவில் கட்டுப்பாடு அவசியம். ஓய்வு கிடைக்கும். முதலீடுகளில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்