12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் பிப்ரவரி 11, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 10 ம் தேதி, திங்கட்கிழமையான இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய பஞ்சாங்கம் :
குரோதி வருடம், தை 28 ம் தேதி திங்கட்கிழமை
சோமவார பிரதோஷம். சுபமுகூர்த்த தினம். இரவு 08.08 வரை திரியோதசி, பிறகு சதுர்த்தசி. இரவு 07.12 வரை புனர்பூசம் நட்சத்திரமும், பிறகு பூசம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.34 வரை சித்தயோகம் பிறகு இரவு 07.12 வரை அமிர்தயோகம், அதற்கு பிறகு சித்தயோகம் உள்ளது.
நல்ல நேரம்: காலை 09.30 முதல் 10.30 வரை; மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் : காலை 01.30 முதல் 02.30 வரை; மாலை 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை
குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் பகல் 3 வரை
சந்திராஷ்டமம் - கேட்டை, மூலம்
இன்றைய ராசிபலன் :
மேஷம் - உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாள். புதிய வாகனங்கள் வாங்குவது தொடர்பான ஆர்வம் அதிகரிக்கும். கல்வி பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்புக்கள் குறையலாம். மனதில் நம்பிக்கை அதிகரிக்கும். தொழிலில் மற்றவர்களின் ஆலோசனையை பெற்று முடிவு செய்வது நல்லது.
ரிஷபம் - குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். நவீன தொழில்நுட்ப கருவிகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். நெருக்கமானவர்கள் பற்றி புரிதல் ஏற்படும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். செயல்பாடுகளில் இருந்த மந்த நிலை மாறும். அமைதி நிறைந்த நாளாக இருக்கும்.
மிதுனம் - மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுக்கும் போது யோசித்து கொடுக்க வேண்டும். வியாபாரத்தில் வரவுகள் ஏற்படும். குடும்பத்தினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வழக்கு விஷயங்களில் மாற்றம் ஏற்படும். கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும். பழக்க வழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் உண்டாகும்.
கடகம் - எதிர்பாராத செலவுகளால் நெருக்கடிகளை சந்திக்க வேண்டி வரலாம். வாழ்க்கை துணையுடன் அனுசரித்து செல்ல வேண்டும். வாக்குவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். ஆரோக்கியம் பற்றிய கவலை உண்டாகும். தோற்றத்தில் மாற்றங்கள் ஏற்படலாம். சூழ்நிலை அறிந்து முடிவுகள் எடுப்பது நல்லது. தொழிலில் லாபங்கள் ஏற்படும்.
சிம்மம் - உலகம் பற்றிய புதிய கண்ணோட்டம் ஏற்படும். வெளியூர் பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வியாபாரம் சுமாராக இருக்கும். கண் தொடர்பான பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத சில செலவுகள் ஏற்பட்டாலும் சமாளிக்கும் சூழல் அமையும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். நட்பு வட்டம் விரிவடையும்.
கன்னி - ஆரோக்கியம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். புது இடங்களுக்கு சென்று வருவீர்கள். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனை உதவிகரமாக இருக்கும். சேமிக்கும் எண்ணம் அதிகரிக்கும். வேலை சார்ந்த சில நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். உதவிகள் கிடைக்கும்.
துலாம் - வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் ஏற்படலாம். மற்றவர்களை பற்றி கருத்து கூறுவதை தவிர்க்க வேண்டும். கடன் விஷயங்களில் சில நுட்பங்களை தெரிந்து கொள்வீர்கள். பொறுப்புகள் அதிகரிக்கும். நெருக்கமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நேர்மறையான சிந்தனையை வளர்த்துக் கொள்வது நல்லது.
விருச்சிகம் - மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். மகிழ்ச்சியான செய்திகள் கிடைப்பதற்கான சூழல் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய துறை சார்ந்த ஆர்வம் அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். நன்மை நிறைந்த நாளாக இருக்கும்.
தனுசு - மறைமுக விமர்சனங்கள் தோன்றி மறையும். பயணங்கள் மூலம் அலைச்சல் ஏற்படும். பணியிடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். நெருக்கமானவர்கள் பற்றி புரிதல் ஏற்படும். எதிலும் திட்டமிட்டு செயல்பட வேண்டும். வேலைகளில் எச்சரிக்கையுடனும், கவனமாகவும் இருக்க வேண்டும்.
மகரம் - வியாபாரத்தில் சில நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த வாய்ப்புகள் கைக்கு கிடைக்கலாம். சிறு கடன்களை அடைப்பீர்கள். வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான தகவல்கள் வந்து சேரலாம். நேர்மறையான செயல்பாடுகளால் நன்மை அடைவீர்கள்.
கும்பம் - குடுத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டாகும். வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். பயணங்களால் மகிழ்ச்சி ஏற்படும். நினைத்த காரியங்கள் கை கூடும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாள்வீர்கள். பணிகளில் முன்னுரிமை கிடைக்கும். உயர்வு நிறைந்த நாள்.
மீனம் - எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். வியாபாரத்தில் சில புதிய யுக்திகளை புரிந்து கொள்வீர்கள். அலுவலகத்தில் உங்கள் கருத்துக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். எதிலும் பணிவுடன் நடந்து கொள்வது நல்லது. குழந்தைகளின் திறமை வெளிப்படும்.