12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - ஜனவரி 10, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
Jan 10, 2025,10:06 AM IST
தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2025 ஆம் ஆண்டு ஜனவரி 10 ம் தேதி, வெள்ளிக்கிழமையான இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய பஞ்சாங்கம் :
குரோதி வருடம், மார்கழி 26 ம் தேதி வெள்ளிக்கிழமை
வைகுண்ட ஏகாதசி. காலை 10.02 வரை ஏகாதசி, பிறகு துவாதசி. பகல் 01.41 வரை கிருத்திகை, பிறகு ரோகிணி நட்சத்திரம் உள்ளது. காலை 06.32 வரை மரணயோகம், பிறகு பகல் 01.41 வரை சித்தயோகம், பிறகு மரணயோகம்.
நல்ல நேரம்: காலை 09.30 முதல் 10.30 வரை; மாலை - மாலை 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் : காலை 12.30 முதல் 01.30 வரை; மாலை 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை
குளிகை - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - பகல் 3 முதல் 04.30 வரை
சந்திராஷ்டமம் - சித்திரை, சுவாதி
இன்றைய ராசிபலன் :
மேஷம் - முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணியில் மன சோர்வு ஏற்படலாம். மனதை உற்சாகமாக வைத்தக் கொள்ள முயற்சி செய்யுங்கள். வாழ்க்கை துணையுடன் சண்டை ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் அனுசரித்து செய்வது நல்லது. வரவுக்கு ஏற்ற செலவும் இருக்கும். முதுகு வலி, செரிமான பிரச்சனை ஏற்படலாம்.
ரிஷபம் - வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். பணியிடத்தில் பொறுமை அவசியம். உங்களின் நேர்மையான போக்கு உயரதிகாரிகளின் பாராட்டை பெற்றுத் தரும். பண வரவு அதிகரிக்கும். அதிகம் சேமிப்பதற்கான வாய்ப்பு ஏற்படும். கால் வலி, கண் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம்.
மிதுனம் - முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். செயல்களின் கவனம் தேவை. பணியிடத்தில் பொறுமை இழக்கும் வகையிலான சம்பவங்கள் நடக்கலாம். வாழ்க்கை துணையுடன் சண்டை சச்சரவு ஏற்படலாம். பண வரவு சுமாராக இருக்கும். அதிக டென்ஷனால் தலைவலி போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
கடகம் - நல்ல நாளாக இருக்கும். முக்கிய முடிவுகள் நல்ல பலனை தரும். அலுவலகத்தில் சிறப்பாக பணியாற்றி திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். வாழ்க்கை துணையுடன் விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். பண வரவு அதிகரிக்கும். சேமிப்பும் அதிகரிப்பதால் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள்.
சிம்மம் - இறை வழிபாட்டின் மூலம் மன நிம்மதி பெற வேண்டிய நாள். பணிகளில் இழுபறி காணப்படும். பணிகளை திட்டமிட்டு செய்வது நல்லது. உயர் அதிகாரிகளின் பாராட்டுக்களை பெறுவீர்கள். பொருளாதாரம் நன்றாக இருக்கும். சிறு சிறு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
கன்னி - எதிலும் பொறுமையை கடைபிடிக்க வேண்டிய நாள். சோர்வுடன் காணப்படுவீர்கள். உங்களின் திறமை, உழைப்பு மற்றவர்களால் கவனிக்கப்படும். வாழ்க்கை துணையுடன் அன்பாக நடந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். பண வரவு சுமாராக இருக்கும். செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனையால் தலைவலி போன்ற தொந்தரவுகள் ஏற்படலாம்.
துலாம் - கவனமாக இருக்க வேண்டிய நாள்.திறமையை முழுமையாக நம்பி செயலாற்ற வேண்டும். பணியில் பதற்றத்துடன் காணப்படுவீர்கள்.இதனால் சில தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. வாழ்க்கையிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பண வரவு சுமாராக இருக்கும். கால் வலி போன்ற பிரச்சனை ஏற்படலாம்.
விருச்சிகம் - சாதகமான நாளாக இருக்கும். பணி சுமை அதிகரிப்பதால் பதற்றத்துடன் காணப்படுவீர்கள். உடன் இருப்பவர்களுடன் நல்லுறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். வாழ்க்கை துணையிடம் அனுசரித்து செல்ல வேண்டும்.செலவுகள் அதிகரிக்கும். தலைவலி, செரிமான பிரச்சனைகள் ஏற்படலாம்.
தனுசு - வெற்றிகரமான நாளாக இருக்கும். சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். திறமைகள் வெளிப்படும். கடினமாக உழைத்து பணிகளை உரிய நேரத்தில் முடிப்பீர்கள். சக பணியாளர்கள் ஆதரவாக இருப்பார்கள். வாழ்க்கை துணையுடன் அன்யோன்யம் அதிகரிக்கும். பணவரவு அதிகரிக்கும். உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும்.
மகரம் - எதையும் பொறுமையுடன் கையாள வேண்டும். பணிகளால் மன அழுத்தம் ஏற்படலாம். இறை வழிபாடு மனதிற்கு ஆறுதலை தரும். வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்ள முயற்சி செய்வீர்கள். வாழ்க்கை துணையிடம் பாராட்டை பெறுவீர்கள். பொருளாதாரம் நன்றாக இருக்கும். சேமிப்பும் உயரும்.
கும்பம் - சுறுசுறுப்பான நாளாக இருக்கும். அலுவலகத்தில் சாதகமாக சூழல் நிலவும். பணிகளில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் சிட்டமிட்டு செயலாற்ற வேண்டும். வாழ்க்கை துணையிடம் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். பண வரவு குறையும். செலவுகளும் அதிகரிக்கும். கால் வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்