12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - ஜனவரி 08, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
Jan 08, 2025,10:13 AM IST
தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2025 ஆம் ஆண்டு ஜனவரி 08 ம் தேதி, புதன்கிழமையான இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய பஞ்சாங்கம் :
குரோதி வருடம், மார்கழி 24 ம் தேதி புதன்கிழமை
பகல் 02.16 வரை நவமி, பிறகு தசமி. மாலை 04.35 வரை அஸ்வினி, பிறகு பரணி நட்சத்திரம் உள்ளது. காலை 06.31 வரை சித்தயோகம், பிறகு மாலை 04.35 வரை மரணயோகம், அதற்கு பிறகு சித்தயோகம் உள்ளது.
நல்ல நேரம்: காலை 09.30 முதல் 10.30 வரை; மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் : காலை 10.30 முதல் 11.30 வரை; மாலை 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை
குளிகை - காலை 10.30 முதல் பகல் 12 வரை
எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை
சந்திராஷ்டமம் - உத்திரம், அஸ்தம்
இன்றைய ராசிபலன் :
மேஷம் - மனதிற்கு விருப்பமான விஷயங்களை செய்வீர்கள். பணவரவு நன்றாக இருக்கும். தடைபட்ட வேலைகளை முடிப்பீர்கள். தேவையற்ற பயங்கள் விலகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
ரிஷபம் - திடீர் அதிர்ஷ்டங்கள் ஏற்படலாம். நவீன பொருட்களுக்காக அதிகம் செலவு செய்வீர்கள். உடன் பிறப்புகளால் நன்மை ஏற்படும். வியாபாரம் விறுவிறுப்படையும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும்.
மிதுனம் - எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும். அரசியலில் இருப்பவர்கள் தலைமைக்கு நெருக்கமாவார்கள். பெற்றோர்களின் கனவு நிறைவேறும். சமூகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். உறவினர்களால் நன்மை ஏற்படும்.
கடகம் - நண்பர்கள் துணையாக இருப்பார்கள். உடன் இருப்பவர்களுடன் நட்பு பலப்படும். கணவன்-மனைவிக்குள் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் விலகும். வர வேண்டிய பணம் வரும். பயணங்கள் லாபம் தருவதாக இருக்கும்.
சிம்மம் - பிரிந்த உறவினர்கள் உங்களை தேடி வருவார்கள். சொத்து வாங்குவது, விற்பது லாபமாக இருக்கும். தம்பதிகளிடையே ஒற்றுமை சிறக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நன்மை அதிகரிக்கும்.
கன்னி - சந்திராஷ்டமம் உள்ளதால் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். இறை வழிபாட்டின் மூலம் நிம்மதி அடைய வேண்டிய நாள். எதிலும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது. வார்த்தைகளில் நிதானம் தேவை.
துலாம் - தொழிலில் லாபம் அதிகரிக்கும். ஆன்மிக சுற்றுலா சென்று வருவீர்கள். பண விஷயங்களில் கவனம் தேவை. வியாபாரம் நன்றாக இருக்கும்.
விருச்சிகம் - தேவையான பொருட்களை வாங்குவீர்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தம்பதிகளுக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். பணிகளை விரைந்து முடிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.
தனுசு - தம்பதிகள் இடையே அன்பு அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பணிகளில் அலட்சியம் வேண்டாம். முன் கோபத்தை தவிர்க்க வேண்டும். பண வரவு அதிகரிக்கும்.
மகரம் - வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். நினைத்த காரியம் நிறைவேறும். வீட்டில் மகிழ்ச்சி தங்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். பங்குகள் மூலம் லாபம் ஏற்படும்.
கும்பம் - எதிர்கால நலன் கருதி சேமிப்பை அதிகப்படுத்துவீர்கள். புதிய தொழில்நுட்பங்களை அறிந்து கொள்வீர்கள். உடன் பிறந்தோர் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்