12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் பிப்ரவரி 07, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 07 ம் தேதி, வெள்ளிக்கிழமையான இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய பஞ்சாங்கம் :
குரோதி வருடம், தை 25 ம் தேதி வெள்ளிக்கிழமை
அதிகாலை 01.17 வரை நவமி, பிறகு இரவு 11.26 வரை தசமி, அதற்கு பிறகு ஏகாதசி. இரவு 08.41 வரை ரோகிணி நட்சத்திரமும், பிறகு மிருகசீரிஷம் நட்சத்திரமும் உள்ளது. இரவு 08.41 வரை மரணயோகம், பிறகு சித்தயோகம் உள்ளது.
நல்ல நேரம்: காலை 09.30 முதல் 10.30 வரை; மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் : காலை 12 முதல் 1 வரை; மாலை 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை
குளிகை - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
சந்திராஷ்டமம் - சுவாதி, விசாகம்
இன்றைய ராசிபலன் :
மேஷம் - சுமாரான நாளாக இருக்கும். ஆன்மிக வழிபாட்டின் மூலம் ஆறுதல் கிடைக்கும். அலுவலகத்தில் சாதகமான சூழல் நிலவும். இருந்தாலும் மற்றவர்களிடம் பேசும் போது வார்த்தைகளில் கவனம் தேவை. வாழ்க்கை துணையுடன் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். பணவரவு சுமாராக இருக்கும். கண்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
ரிஷபம் - சாதகமான நாளாக இருக்கும். சவால்களான சூழ்நிலைகளையும் திறமையாக சமாளிப்பீர்கள். பணியிடத்தில் சக பணியாளர்களிடம் வாக்குவாதம் ஏற்படலாம். எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது. குடும்பத்தில் மனம் விட்டு பேசுவதால் மகிழ்ச்சி அதிகரிக்கும். செலவுகளை கவனமுடன் கையாள்வத நல்லது. தொண்டை தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம்.
மிதுனம் - சற்று கடினமான நாளாக இருக்கும். முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். எதிலும் கவனமுடன் இருப்பது நல்லது. அலுவலகத்தில் புதிய முயற்சிகள் நல்ல பலன் அளிக்கும். வாழ்க்கை துணையுடன் மனகசப்புகள் ஏற்படலாம். தேவையற்ற செலவுகளை குறைப்பது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.
கடகம் - சிறப்பான நாளாக இருக்கும். எதிர்கால வளர்ச்சி பற்றி முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பணியிடத்தில் தாமதங்கள் ஏற்படலாம். திட்டமிட்டு செல்படுவது நல்லது. வாழ்க்கை துணையுடனான அன்பு அதிகரிக்கும். பணவரவு அதிகரிக்கும். முதலீடு திட்டங்களில் ஆர்வம் காட்டுவீர்கள். உட,் நலன் நன்றாக இருக்கும்.
சிம்மம் - அலைச்சல் நிறைந்த நாளாக இருக்கும், திடீர் பயணங்கள் ஏற்படலாம். ஆன்மிக விஷயங்களில் ஈடுபடுவீர்கள். பணிகளை சிறப்பாக செய்து முடித்து மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். குடும்பத்தில் பெரியவர்களுடன் வாக்குவாதம் ஏற்படலாம். தேவையற்ற செலவுகளை குறைக்க வேண்டும். உடல் நலனில் அக்கறை தேவை.
கன்னி - சுமாரான நாளாக இருக்கும். ஆன்மிக செயல்பாடுகளால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பணியில் கவனமாக இருப்பது நல்லது. வாழ்க்கை துணையுடன் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். வரவுக்கு ஏற்ற செலவுகள் ஏற்படும். சளி,இருமல், காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது.
துலாம் - மந்தமான நாளாக இருக்கும். எதிலும் பொறுமை, கவனத்துடன் இருக்க வேண்டும். பணிச்சுமை அதிகரிக்கலாம். பணிகளில் தாமதம் ஏற்படலாம். வாழ்க்கை துணையுடன் மனக்கசப்பு ஏற்படலாம். எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். பணத்தை கையாள்வதில் கவனம் தேவை. ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படலாம்.
விருச்சிகம் - சிறப்பான நாளாக இருக்கும். மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். பணிகளை சிறப்பாக முடித்து மேலதிகாரியிடம் பாராட்டு பெறுவீர்கள். வாழ்க்கை துணையுடன் மனம் விட்டு பேசுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும், திடீர் அதிர்ஷ்டங்கள் ஏற்படலாம். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
தனுசு - சாதகமான நாளாக இருக்கும். முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். நல்ல வாய்ப்புகள் வருவதற்கான வாய்ப்பு ஏற்படும். கடினமான பணிகளை கூட எளிதாக முடிப்பீர்கள். சக பணியாளர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. வாழ்க்கை துணையுடன் பேசும் போது கவனம் தேவை. பணவரவு அதிகரிக்கும். சொத்து சேர்க்கை ஏற்பட வாய்ப்புள்ளது.
மகரம் - கடினமான நாளாக இருக்கும். நன்மை, தீமை கலந்து இருக்கும். பணிகளில் கூடுதல் கவனமுடன் இருக்க வேண்டும். பணிகளை திட்டமிட்டு செய்வது நல்லது. வாழ்க்கை துணையுடனான அன்பு அதிகரிக்கும். இதனால் மகிழ்ச்சி அடைவீர்கள். வரவும் செலவும் சரியாக இருக்கும். பணத்தை முறையாக கையாள்வது அவசியம்.
கும்பம் - எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கலாம். சில வேண்டாத சம்பவங்கள் நடக்கலாம். பணியிடத்தில் சாதகமான சூழல் நிலவும். புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். வாழ்க்கை துணையை அனுசரித்து செல்வது நல்லது. வரவை விட செலவு அதிகமாக இருக்கும். பணத்தை கவனமாக கையாள வேண்டும். தொண்டை வலி ஏற்படலாம்.
மீனம் - தடைகள் நிறைந்த நாளாக இருக்கும். குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பணிகளில் தாமதம் ஏற்படலாம். எதையும் அனுசரித்து செல்ல வேண்டும். வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பணப்புழக்கம் குறைவாக இருக்கும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்