12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் பிப்ரவரி 05, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 05 ம் தேதி, புதன்கிழமையான இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய பஞ்சாங்கம் :
குரோதி வருடம், தை 23 ம் தேதி புதன்கிழமை
பீஷ்மாஷ்டமி. காலை 04.15 வரை சப்தமி, பிறகு அஷ்டமி. பிப்ரவரி 05ம் தேதி காலை 04.16 முதல் பிப்ரவரி 06 ம் தேதி காலை 03.20 வரை அஷ்டமி திதி உள்ளது. அதிகாலை 12.52 வரை அஸ்வினி நட்சத்திரமும், பிறகு இரவு 11.18 வரை பரணி நட்சத்திரமும், அதற்கு பிறகு கிருத்திகை நட்சத்திரமும் உள்ளது. இரவு 11.18 வரை சித்தயோகம், பிறகு அமிர்தயோகம் உள்ளது.
நல்ல நேரம்: காலை 11.30 முதல் 12 வரை; மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் : காலை 01.30 முதல் 02.30 வரை; மாலை 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை
குளிகை - காலை 10.30 முதல் பகல் 12 வரை
எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை
சந்திராஷ்டமம் - உத்திரம், அஸ்தம், சித்திரை
இன்றைய ராசிபலன் :
மேஷம் - மந்தமான நாளாக இருக்கும். சோர்வுடன் காணப்படுவீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சில சவாலான சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டி வரலாம். வாழ்க்கை துணையுடன் பேசும் போது கவனம் வேண்டும். உடல் ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய வேண்டி இருக்கும்.
ரிஷபம் - குழப்பமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். எதிலும் பொறுமையும் உறுதியம் வேண்டும். வேலையில் அதிக கவனம் செலுத்துவது நலல்து. வாழ்க்கை துணையிடம் உணர்ச்சிவசப்பட்டு பேசுவீர்கள். செலவுகளில் கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மிதுனம் - எதிலும் கவனமுடன் செயல்பட வேண்டும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். எதையும் திட்டமிட்டு செய்வது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. பண விஷயத்தில் கவனம் அவசியம். செரிமான பிரச்சனைகள் ஏற்படலாம்.
கடகம் - சுமாரான நாளாக இருக்கும். நன்மை-தீமைகள் கலந்த நாளாக இருக்கும். பணியிடத்தில் சாதகமான சூழல் நிலவும். கடின உழைப்பால் வளர்ச்சி காண வேண்டிய நாள். சிலருக்கு பதவி உயர்வு ஏற்படலாம். குடும்பத்தில் சுப காரியம் தொடர்பான முடிவு எடுப்பீர்கள். சேமிப்பு உயரும்.
சிம்மம் - சுமாரான பலன்களே கிடைக்கும் நாளாக இருக்கும். எதிர்மறை எண்ணங்களை தவிர்ப்பது நல்லது. சுற்றி இருப்பவர்களிடம் கவனமாக பழக வேண்டும். பணிகளில் சில தடைகளை சந்திக்கலாம். வாழ்க்கை துணையுடன் புரிதல் அதிகரிக்கும். வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருக்கும்.
கன்னி - இறை வழிபாட்டின் மூலம் நன்மை காண வேண்டிய நாள். சில சிரமகங்களை சந்திக்க வேண்டி இருக்கலாம். வேலைச் சுமை அதிகரிக்கும். பணிகளை திட்டமிட்டு செய்வது நல்லது. வாழ்க்கை துணையுடன் அனுசரித்து செல்ல வேண்டும். பணத்தை கவனமாக செலவு செய்ய வேண்டும். தலைவலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
துலாம் - மற்றவர்களிடம் பேசும் போது கவனம் இருக்க வேண்டும். ஓய்வில்லாமல் பணியாற்ற வேண்டி இருக்கும். குடும்பத்தில் சில பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். செலவுகள் அதிகரிக்கும். தேவையற்ற செலவுகளை குறைக்க வேண்டும். ஆரோக்கியத்தில் கவனமுடன் இருப்பது நல்லது.
விருச்சிகம் - வளர்ச்சியில் தடைகள் ஏற்படலாம். பணிச்சுமை அதிகரிக்கும். பணியில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. கவனமுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் மனம் விட்டு பேசுவது நல்லது. பணத்தை சேமிக்கும் முயற்சிகளில் இறங்க வேண்டும். வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும்.
தனுசு - எதிலும் கவனமுடன் இருக்க வேண்டும். எதிலும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். பணிகளை திட்டமிட்டு முடிப்பது நல்லது. வாழ்க்கை துணையுடன் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். தேவைக்காக கடன் வாங்க நேரிடும். உணவுகளில் கவனம் தேவை. தோள் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம்.
மகரம் - மற்றவர்கள் செய்த தவறுக்காக நீங்கள் பொறுப்பேற்க வேண்டி இருக்கும். பணியிடத்தில் மற்றவர்களுடன் கவனமாக இருக்க வேண்டும். வாழ்க்கை துணையுடன் மனம் விட்டு பேசுவதால் புரிதல் அதிகரிக்கும். தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். தலைவலி போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
கும்பம் - அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். பணியிடத்தில் சிறப்பாக பணியாற்றி வெற்றி பெறுவீர்கள். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வாழ்க்கை துணையுடனான அன்பு அதிகரிக்கும். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். மகிழ்ச்சியாவ தருணங்கள் ஏற்படும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
மீனம் - எதிலும் கவனமாக இருக்க வேண்டும். வேலைப்பளு அதிகரிக்கும். இதனால் கவலை அடைவீர்கள். வாழ்க்கை துணையுடன் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பணப் பற்றாக்குறை காரணமாக கடன் வாங்க நேரிடலாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்