12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் பிப்ரவரி 01, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

vanitha
Feb 01, 2025,09:31 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 01 ம் தேதி, சனிக்கிழமையான இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.


இன்றைய பஞ்சாங்கம் :


குரோதி வருடம், தை 19 ம் தேதி சனிக்கிழமை

பகல் 02.36 வரை திரிதியை, பிறகு சதுர்த்தி. காலை 06.58 வரை சதயம் நட்சத்திரமும், பிறகு பூரட்டாதி நட்சத்திரமும் உள்ளது. காலை 06.35 வரை சித்தயோகம், பிறகு காலை 06.58 வரை அமிர்தயோகம், பிறகு மரணயோகம் உள்ளது. 


நல்ல நேரம்: காலை 07.30 முதல் 08.30 வரை; மாலை - 04.30 முதல் 05.30 வரை

கெளரி நல்ல நேரம் : காலை 10.30 முதல் 11.30 வரை; மாலை 09.30 முதல் 10.30 வரை


ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை

குளிகை - காலை 6 முதல் 07.30 வரை 

எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை


சந்திராஷ்டமம் - பூசம், ஆயில்யம்


இன்றைய ராசிபலன் :




மேஷம் -  நல்ல நாளாக இருக்கும் உணர்ச்சி வசப்பட்டு எந்த முடிவையும் எடுப்பதை தவிர்க்க வேண்டும். மனதை அமைதியாக்கும் வழிகளில் நேரத்தை செலவிட வேண்டும். தொழில் சிறப்பாக இருக்கும். பொருளாதார நன்றாக இருக்கும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி ஏற்படும்.


ரிஷபம் - எதிலும் கவனமாக இருக்க வேண்டும். பணியிடத்தில் பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். வாழ்க்கை துணையின் ஆதரவு பலமாக இருப்பதால் எந்த வேலையிலும் வெற்றி பெற முடியும். செலவுகளை கட்டுப்படுத்த முயற்சி மேற்கொள்ள வேண்டும்.


மிதுனம் -    மங்களகரமான நாளாக இருக்கும். வேலையில் முன்னேற்றம் ஏற்படும். எதிலும் தைரியத்துடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். வீடு, மனை, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படலாம். 


கடகம் -   சாதகமான நாளாக இருக்கும். இருந்தாலும் முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தின் முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கை துணையின் ஆதரவு நம்பிக்கையை தரும். விருப்பங்கள் நிறைவேறும். நீண்ட முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும்.


சிம்மம் -   சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரலாம். தேங்கி இருந்த வேலைகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். ஆடம்பர பொருட்கள் வாங்குவதை தவிர்ப்பதால் சேமிப்புகள் கரையாமல் இருக்கும்.


கன்னி -  சுமாரான நாளாக இருக்கும். செலவுகள் அதிகரிப்பதால் மனதில் குழப்பங்கள் ஏற்படலாம். சோர்வாக காணப்படுவீர்கள். உடல் நலனில் அக்கறை தேவை. வாழ்க்கை துணையின் உடல் நலனிலும் அக்கறை செலுத்துங்கள். வியாபாரம் நன்றாக இருக்கும்.


துலாம் -   பணம் தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நல்ல செய்திகளை பெறலாம். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். அரசியல் ரீதியான ஆதரவுகள் கிடைக்கும். பணத்தை செலவு செய்வதில் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். 


விருச்சிகம் -  அரசு வழியில் அனுகூலம் உண்டு. மூத்த அதிகாரிகளின் ஆதரவால் முக்கியமான வாய்ப்பு ஒன்று கிடைக்கலாம். தொழிலில் வெற்றி அடைவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். எதிர்பாராத பணவரவு ஏற்படும். 


தனுசு - அதிர்ஷ்டகரமான நாளாக இருக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் வெற்றி அடைவீர்கள். பயணங்கள் அனுகூலம் ஆகும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பெற்றோர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். முக்கிய நபர்களின் சந்திப்பு நிகழலாம். மனம் மகிழ்ச்சியாக இருக்கும். பண வரவுகள் சாதகமாக இருக்கும்.   

மகரம் -  மனதில் குழப்பங்கள் ஏற்படலாம் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். குடும்பத்துடன் சுற்றுலா செல்லும் வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். தொழில் நன்றாக இருக்கும். 


கும்பம் -   பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கை துணையின் ஆதரவு நம்பிக்கையை தரும். தொழில் சிறப்படையும். ஆன்மிக பணிகளில் ஈடுபடுவீர்கள். மனதிற்கு பிரியமானவர்களின் உதவி கிடைக்கும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்க வாய்ப்புள்ளது.


மீனம் -   கோர்ட் வழக்குகள் சாதகமாகும். உடன் பிறந்தவர்களுக்கு பொருளாதார ரீதியான உதவி செய்ய வேண்டி இருக்கும். பணத்தை சேமிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். வாழ்க்கை துணையின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முடிவுகளை எடுப்பீர்கள்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்