Gold rate.. தங்கமே தங்கம்.. இப்படி வித்தா எப்படிம்மா வாங்குறது.. சவரனுக்கு ரூ. 200 அதிகரிப்பு!
சென்னை: தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 200 ரூபாய் அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 18ம் தேதியில் இருந்து தங்கம் விலையில் பெரிய அளவில் எந்த மாற்றமும் இல்லை. இருப்பினும் கடந்த 21ம் தேதி அதிரடியாக சவரனுக்கு ரூ.480 அதிகரித்தது. அதன்பின்னர் தொடர்ந்து தங்கத்தின் விலையில் எந்த ஏற்றமும் இறக்கமும் இல்லாமல் இருந்தது. கிறிஸ்துமஸ் பண்டிகையின் முதல் நாள் சவரனுக்கு ரூ.80 குறைந்தது. கிறிஸ்துமஸ் நாளன்று, ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து 1 சவரன் ரூ.56,800க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையின் மறுநாள் அதாவது 26 ஆம் தேதி தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ. 200 அதிகரித்துள்ளது. அதன்படி, இன்று (26.12.24) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7,125க்கும், 8 கிராமிற்கு ரூ.200 உயர்ந்து ரூ.57,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையும் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.5,885க்கும், 8 கிராமிற்கு ரூ.80 உயர்ந்து ரூ.47,080க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. ஒரு கிராமிற்கு ரூ.1 உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,00,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்