அடடே.. தங்கம் விலை இன்னிக்கு கம்மி ஆயிருச்சு.. என்ன கடைக்குக் கிளம்பலாமா!
சென்னை: சென்னையில் நேற்று அதிகரித்து இருந்த தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. இன்று சவரனுக்கு ரூ.40 குறைந்துள்ளது. பண்டிகை காலங்களில் தங்கம் விலை குறைந்திருப்பது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு,சர்வதேச அரசியல் சூழல் ஆகியவற்றின் காரணத்தினால் தங்கம் விலை ஏற்ற இறக்கத்தில் இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர். நேற்று சவரனுக்கு ரூ. 80 அதிகரித்து இருந்த தங்கம் இன்று சவரனுக்கு ரூ.40 குறைந்துள்ளது. இந்த விலை குறைவு பண்டிகையை முன்னிட்டு நகை வாங்குபவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் பொங்கல் பண்டிகை அடுத்து வரவிருக்கிறது. எனவே மக்கள் நகை, பொருட்கள், துணிமணிகள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக நகை கடைகளில் கூட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த நேரத்தில் தங்கம் விலை குறைந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக வாடிக்கையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இன்றைய விலை
இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை, ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 5915 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 40 ரூபாய் குறைந்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 47320 ரூபாயக உள்ளது. 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 6453 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 5 ரூபாய் குறைவாகும். 8 கிராம் 24 கேரட்டின் விலை ரூ.51624 ஆக உள்ளது.
தங்கம் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளி விலை கிராம் ஒன்றிற்கு 0.30 காசுகள் குறைந்து ரூபாய் 80 ஆக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 640 ஆக உள்ளது.