மார்ச் 04 - இன்று என்ன செய்வதற்கு ஏற்ற நாள் ?

Aadmika
Mar 04, 2023,10:06 AM IST
இன்று மார்ச் 04 சனிக்கிழமை. சுபகிருது ஆண்டு மாசி 20. 
வளர்பிறை மேல்நோக்கு நாள். சனிப்பிரதோஷம்



பகல் 01.39 வரை துவாதசி, பிறகு திரியோதசி திதி. இரவு 08.22 வரை பூசம், பிறகு ஆயில்யம் நட்சத்திரம். காலை 06.27 வரை மரணயோகம், பிறகு இரவு 08.22 வரை சித்தயோகம், பிறகு மரணயோகம்.

நல்ல நேரம் :

காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை

கெளரி நல்ல நேரம் :

காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 09.30 முதல் 10.30 வரை 

ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை 
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை

இன்று என்ன செய்ய நல்ல நாள் ?

பூமி தொடர்பான பணிகளை மேற்கொள்ள, குரு உபதேசம் பெறுவதற்கு, அபிஷேகம் செய்வதற்கு உகந்த நாள்.

யாரை வழி பட வேண்டும் ?

இனி சனிப்பிரதோஷம் என்பதால் நந்தியை வழிபட காரிய தடைகள் விலகும். விரதமிருந்து சிவ பெருமானை வழிபட்டால் பாவங்கள், தோஷங்கள் நீங்கும்.