டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் வந்தாச்சு.. ஆன்லைனில் பார்க்கலாம்!

Meenakshi
Apr 09, 2024,06:27 PM IST

சென்னை: தமிழ்நாடு  அரசு பணியாளர் தேர்வாணயம் நடத்தும் குரூப் 2ஏ  தேர்வுகளின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.


தமிழக அரசு சார்ந்த பணிகளுக்கு தேவையான திறமையான ஊழியர்களை கண்டறிய அரசு பல்வேறு போட்டித்தேர்வுகள் மற்றும் நேர்காணல் ஆகியவற்றை டிஎன்பிஎஸ்சி சார்பில்  நடத்தி வருகிறது. டிஎன்பிஎஸ்சி நடத்தும் அரசு தேர்வுகளில் ஒன்று குரூப் 2 தேர்வு. சார் பதிவாளர், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர் அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர், உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் நேர்காணல் அடிப்படையில் நிரப்படும். 




நேர்முக தேர்வு அல்லாத பதவிகளில் அரசின் பல்வேறு துறைகளில் உதவியாளர், நேர்முக எழுத்தர், தலைமை செயலகம் மற்றும் டிஎன்பிஎஸ்சியில் தனிப்பட்ட எழுத்தர் போன்ற பணியிடங்கள் நிரப்படுகின்றன.


டிஎன்பிஎஸ்சி அறிவித்த குரூப் 2 பதவிகளின் 116 இடங்களுக்கும், குரூப் 2ஏ பதிவிளில் 5,990 இடங்களுக்குமான தேர்வு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 25ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை எழுத 11 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுத விண்ணப்பித்தனர். அதில் 9,94,890 பேர் தேர்வு எழுதினார்கள்.தமிழ்நாடு முழுவதும்  20 மாவட்டங்களில் இந்த தேர்வுகள் நடைபெற்றன. 


குரூப் 2  தேர்விற்கான முடிவுகள் ஜனவரி 12, 2024ல் வெளியிடப்பட்டது. 2ஏ தேர்வுகளுக்கான  தேர்வு முடிவுகள் டிசம்பர் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று தான் தேர்வாணையம் முடிவுகளை வெளியிட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் இன்று நேர்காணல் இல்லாத குரூப்2 ஏ பதவிகளுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.