டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் ரிலீஸ்.. 9491 பேருக்கு அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் வரப் போகுது!
சென்னை: 2024 ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகள் கடந்த ஜூன் 9ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இன்று தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு துறையில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு டிஎன்பிசி குரூப் தேர்வு மூலம் போட்டி தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு அரசு துறைகளில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு கடந்த ஜூன் 9 ஆம் தேதி நடத்தப்பட்டது.
இந்த தேர்விற்கு 20 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்த நிலையில் 15.88 லட்சம் பேர் எழுதினர். குரூப் 4 தேர்வில் ஏற்கனவே 6,244 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில்,முதலில் 480 காலிப்பணியிடங்களும், இரண்டாம் முறை 2,208 காலிப்பணியிடங்கள் கூடுதலாக அதிகரிக்கப்பட்டு மொத்தம் 8,932 காலிப்பணியிடங்களில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதையடுத்து மேலும் 559 காலிப் பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டு மொத்தம் 9491 பேர் வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.
காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தகுதியானவர்கள் யார் என்பது தொடர்பான அறிவிப்புகளை பார்க்க கீழ்கண்ட விபரங்களை பின்தொடரவும்,
முதலில் https://tnpscresults.tn.gov.in/ மற்றும் https://www.tnpsc.gov.in/ ஆகிய வெப்சைட் உள்ளே நுழைய வேண்டும்.
அதில் தேர்வர்களின் பதிவு எண் மற்றும் பிறந்த நாள் ஆகிய விவரங்களை பதிவு செய்ய வேண்டும். பிறகு நாம் உள்ளிட்ட விவரங்கள் திரையில் தெரியும். தொடர்ந்து Capcha உள்ளிட்டு Submit கொடுக்கவும். இதனைத்தொடர்ந்து, தேர்வு முடிவுகள் திரையில் தெரியும். அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்