விநாயகர் சதுர்த்தியை கொண்டாட.. 1250 சிறப்புப் பேருந்துகளுடன் அரசும் ரெடி!

Meenakshi
Sep 15, 2023,04:39 PM IST

சென்னை:  விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னையிலிருந்து பல்வேறு நகரங்களுக்கும் மக்கள் எளிதாக செல்வதற்கு வசதியாக 1250 சிறப்புப் பேருந்துகளை அரசுப் போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.


செப்டம்பர் 18ம் தேதி விநாயகர் சதுர்த்தி வருகிறது. சனி, ஞாயிறு, திங்கள்கிழமை என மூன்று நாட்கள் விடுமுறை வருவதால் இன்று முதல் மக்கள் பெருமளவில் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வார்கள். இதனால் சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய பகுதிகளுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 1,250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.




தற்போது வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக இந்த சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். சென்னையிலிருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு இன்று முதல் தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 650 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


எங்கெங்கு சிறப்புப் பஸ்கள்


சென்னையில் இருந்து இன்று 500 பேருந்துகள், நாளை  350 பேருந்துகள், கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம், பெங்களூரு போன்ற இடங்களிலிருந்து 400 பேருந்துகள் என மொத்தம் 1,250 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.


இதுமட்டுமின்றி, வருகிற ஞாயிற்றுக்கிழமை  பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்குத் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சிறப்புப் பேருந்து இயக்கத்தைக் கண்காணிக்க அனைத்துப் பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.