லியோ சிறப்பு காட்சிகளுக்கு பச்சைக் கொடி.. நண்பாஸ், நண்பீஸ் ஹேப்பி!

Su.tha Arivalagan
Oct 11, 2023,04:42 PM IST

சென்னை: லியோ படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.


விஜய், திரிஷா நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. படத்தின் 2 பாடல்கள் ஏற்கனவே வெளியாகி, டிரைலரும் பட்டையைக் கிளப்பி விட்டது.


இந்த நிலையில் படத்தின் சிறப்புக் காட்சிகள்குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களை ஹேப்பியாக்கியுள்ளது.




படம் வெளியாகும் நாளில் கூடுதலாக 2 சிறப்புக் காட்சிகளை வெளியிடவும். மற்ற நாட்களில்அதாவது படம் வெளியாகி வெளியாகி அடுத்த 5 நாட்களுக்கு கூடுதலாக ஒரு காட்சியை வெளியிடவும் அனுமதி கோரப்பட்டிருந்தது.


இருப்பினும், 19ம் தேதி ரிலீஸாகும் தினத்திலிருந்து 24ம் தேதி வரை தினசரி 5  காட்சிகள் படம்  திரையிடப்படும் என்று அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த செய்தி ரசிகர்களை குஷியாக்கியுள்ளது.