தாமிரபரணி - கருமேனியாறு-நம்பியாறு நதிநீர் இணைப்பு திட்டத்தில் சோதனை ஓட்டம்.. முதல்வர் உத்தரவு
சென்னை : நெல்லை மாவட்ட அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரை வறண்ட நிலங்களுக்கு திருப்பி விட தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே பெய்த மழையால் மாவட்டம் முழுவதும் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதற்கிடையில் நெல்லை மாவட்ட அணைகள் வேகமாக நிரம்பி வருவதாக அவற்றில் இருந்து உபரிநீர் தாமிரபரணி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருவதால் வெள்ள அபாய உச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஆற்றில் வெளியேற்றப்படும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அபரிமிமாக வரும் உபரி நீரை வறண்ட நிலங்களுக்கு திருப்பிவிட தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதாவது, தாமிரபரணி - கருமேனியாறு-நம்பியாறு நதிநீர் இணைப்பு திட்டத்தில் சோதனை ஓட்டம் மேற்கொள்ளுமாறு முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தாமிரபரணி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரிநீரை நெல்லை, தூத்துக்குடி மாவட்ட வறண்ட பகுதிகளுக்கு கொண்டும் செல்லும் திட்டத்தின் சோதனை ஓட்டத்தை உடனடியாக நடத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
தற்போது அபரிமிதமாக வரும் வெள்ள நீரை வீணடிக்காமல் இந்த சோதனை ஓட்டத்தை நடத்த அதிகாரிகள் தற்போது திட்டமிட்டுள்ளனர்.