துணிவா.. வாரிசா.. முதல் நாள் கலெக்சனில் யாரு டாப்?

Baluchamy
Jan 12, 2023,05:11 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை வருவதற்கு என்னும் ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில் நேற்று அஜித்தின் 'துணிவு' மற்றும் விஜய்யின் 'வாரிசு' திரைப்படம் வெளியாகி தமிழ்நாடு முழுவதும் களைகட்டியது.

இயக்குநர் வம்சி இயக்கத்தில் தயாரிப்பாளர் தில்ராஜ் தயாரிப்பில் நடிகர் விஜய் நடிப்பில் எடுக்கப்பட்ட 'வாரிசு' திரைப்படம் பல இடையூறுகளை கடந்து நேற்று உலகமெங்கும் வெளியாகி கோடானகோடி விஜய் ரசிகர்களின் பல நாள் ஏக்கத்தை தீர்த்து வைத்தது.


அதேபோல் வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே கொடுக்கும் அஜித் இம்முறை வருடத்தின் தொடக்கத்திலே 'துணிவு' படத்தை 'வாரிசு' படத்துடன் துணிச்சலாக களம் இறக்கியுள்ளார். அஜித் என்ற வார்த்தையை கேட்டாலே வெறியாகும் ரசிகர்களுக்கு இம்முறை எதிர்பார்ப்பு சற்று தூக்கலாகவே இருந்தது.

படம் வெளியாவதற்கு முன் அஜித்தின் மாஸ் கெட் அப் புகைப்படங்கள் வெளியாகி அஜித் ரசிகர்களை இரவும், பகலும் தூங்கவிடாமல் செய்தது என கூறலாம், அதேபோல் விஜய் ரசிகர்களுக்கும் இம்முறை ரஞ்சிதமே மற்றும் தீ தீ தளபதி பாடல் வெளியாகி வாரிசு படத்தின் மேல் உள்ள எதிர்பார்ப்பை நாளுக்குநாள் அதிகரித்தது.

இருப்பினும் ஒருவழியாக இருபடங்களும் நேற்று உலகம் முழுவதும் ரசிகர்களின் ஆட்டம் பாட்டத்துடன் பிரமாண்டமாக வெளியானது. படம் வெளியாகி சில பாசிட்டிவ், சில நெகடிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் தற்போது பாக்ஸ் ஆபிஸ் முதல் நாள் கலெக்சனில் யாரு டாப் என்பதை ரசிகர்கள் நீயா? நானா? என போட்டி போட்டுகொண்டுள்ளனர்.

இயக்குநர் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் இந்திய முழுவதும் முதல் நாள் கலெக்சனாக சுமார் 24 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   அதேபோல் துணிவுடன் போட்டிபோட்ட விஜய்யின் வாரிசு திரைப்படம் இந்திய முழுவதும் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்சனாக 19 முதல் 20  கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த போட்டாபோட்டி பந்தயத்தில் விஜய்யின் வாரிசு படத்தை பின்னுக்கு தல்லி அஜித்தின் துணிவு திரைப்படம் துணிச்சலாக முதல் இடத்தை தட்டிச் சென்றது.

இந்தியாவில் வாரிசு படத்தின் கலெக்சன் சற்று குறைந்திருந்தாலும் ஆஸ்திரேலியாவில் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்சனாக ரூபாய் 80 லட்சமும், துணிவு ரூபாய் 33 லட்சமும் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

அதேபோல் அமெரிக்காவில் துணிவு 2.2 கோடி ரூபாயும், வாரிசு 1.2 கோடி ரூபாயும் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இந்நிலையில் வார நாட்களில் வெளியாகி கோடிகளில் ஆட்டம் போடும் இப்படங்கள் இனி பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களில் எத்தனை கோடிகளை அல்ல போகின்றதோ என பொறுத்திருந்து பார்ப்போம்.