Valentine's day.. என் உயிர்  நீதானே.. பெரியோர் பார்த்து நிச்சயித்த காதல் கதை!

Su.tha Arivalagan
Feb 14, 2023,12:01 PM IST
- திவ்யா தங்கவேல் 

தலைப்பைப் பார்த்தவுடன் "என்னவர்"... இது பொய்னு சொல்வார்... உலகெங்கம் இன்று வாலெண்டைன் டே (valentine day) கொண்டாடுகிறார்கள்.. சரி நம்மாளுக்கு என்ன கிப்ட் பண்ணலாம் என்று தேடி அலைஞ்சேன்.. அதன் பிறகுதான் தெரிந்தது.. அடடே.. அவரே நமக்கு சூப்பரான கிப்ட்டாச்சேன்னு.. உண்மையில் என்னோட பொக்கிஷமே என்னவர் தான். அவரை விட பெரிய பொக்கிஷம் வேற இருக்க முடியாது. 
  
என் வாழ்க்கையில் என்னவர் எப்படி  வந்தாரு? ஒரு  rewind செஞ்சி பார்க்கலாமா..

எங்களோடது காதல் கல்யாணம் அல்ல.. அதை முதலிலேயே சொல்லிடறேன். பெரியோர்களால் நிச்சயித்த திருமணம்.  சோ நோ காதல் அன்ட் கத்திரிக்காய்..  காலேஜ் படித்தவுடன் சென்னையில் ஒரு (IT) கம்பெனியில் ஒர்க் ஓராண்டு இனிதே நிறைவு பெற்றது. நான் இந்தப் பக்கம் வேலை பார்க்க, மாப்பிள்ளை பார்க்கும் படலம் அது ஒரு சைடில் நடந்துட்டு இருந்தது. 

இதற்கிடையில் அப்பாவின் உடல் நிலை திடீரென பாதிக்கப்பட்டது.  minor stroke (face palsy)..  இதனால் வேலையை  விட்டுட்டு அப்பாகிட்ட வந்துட்டேன். அப்பாவுடன் இருந்து பார்த்துகிட்டேன். அது மன திருப்தியையும் கொடுத்தது. ஆனால் தாத்தாவை அந்த மாதத்தில் இழக்க நேரிட்டது. என் கல்யாணத்தை பாத்துட்டு கண்ணை மூடுவேன்னு சொன்ன ஜீவன் எங்களை விட்டு ரொம்ப தூரம் போய்ட்டாரு. அவர் என்னிடம் விரும்பிக் கேட்டது ஒரு வாட்ச்.. அதை வாங்கிக் கொடுத்தது எனக்கு இன்று வரை திருப்தியா இருக்கு. 

வீட்டில் அனைவரும் ஒரு வருடத்துக்குள் சுப காரியம் சீக்கிரம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தவே இன்னும் தீவிரமாக மாப்பிள்ளை தேடும் படலம்.  இரண்டு மாப்பிள்ளை வந்தார்கள்.. ஆனால் நான் நேரில் பார்த்தது என்னவர் மட்டுமே.

"ஏப்ரல் மாதத்தில் என் ஜன்னல் ஓரத்தில்" என்று பாடிட்டு இருந்த என்னை,  Tamil nadu Election April 24 2014.. அன்னைக்கி பொண்ணு பார்க்க வராங்க என்று புரோக்கர் சொல்ல, அடப் போங்கய்யா இன்னக்கி வர சொல்லாதீங்க. எங்க அம்மா இல்லை இன்னொரு நாள் வர சொல்லுங்க என்று சொன்னேன். புரோக்கரோ, அதெல்லாம் தப்பு, வரேன்னு சொல்றவங்கள வரக்கூடாதுன்னு சொல்லக்கூடாது பாப்பா. நீ வர வேண்டாம் அவங்க அப்பாவை வந்து பார்த்துட்டு போகட்டும்னு சொல்லிட்டாரு . தேர்தலில் ஓட்டு போட்டுட்டு அம்மா செஞ்ச பிரியாணி சாப்பிட்டு தூங்கலாம்ன்னு நாம ஒன்னு நெனச்சா அங்க நமக்கு முன்னாடி வேற நடக்குதேன்னு எனக்கோ அலுப்பு.

அப்போதெல்லாம் சரியாக புடவை கட்ட தெரியாது. இது முதல் சிக்கல். அம்மா வீட்டில் இல்லை அன்று, அது இரண்டாவது சிக்கல்.  எங்க வீட்ல குடி இருக்கும் அனைவரும் ஓட்டை போடுவதற்கு தம் சொந்த ஊருக்கு போய்ட்டாங்க. சாய்பாபா இது என்ன சோதனைன்னு அவரை நினைக்க, அந்த சமயம் பார்த்து, எங்க வீட்ல குடி இருந்துட்டு வேற வீட்டுக்கு போன அக்கா என்னை பாக்க வந்தாங்க. தெய்வமே அனுப்பி வச்ச மாதிரி இருந்தது. அவங்களை புடவை கட்டி விட சொல்ல, ஒரு வழியாக தயாராகிட்டேன். மூன்று மணி இருக்கும் என்னவர் வீட்லேந்து வந்தாங்க, ஆனால் "அவர்" வரலை.. அதனால பாக்கியராஜ் படத்துல வர்ற மாதிரி, இந்த ஜன்னல் வழியா திருட்டுத்தனமா பாக்கற வேலை அன்று இல்லை. 

நீ வரவே வேணாம் என்று அன்று சொன்ன புரோக்கர், "பாப்பா வாம்மா தங்கம் வந்து தண்ணி மட்டும் கொடுத்துட்டு போ" என்று எல்லோர் முன்னாடியும் என்னை மாட்டி விட "அடப் பாவி இப்படி மாட்டிவிடுறாரே" என்று கோவம் கலந்த வெக்கத்துடன் எல்லார்க்கும் தண்ணீர் கொடுத்துட்டு ஒடி வந்தேன். என் மாமியார் என்னவர் போட்டோவை புரோக்கரிடம்  கொடுக்க, எனக்கோ போட்டோவை பார்க்கும் எண்ணம் இல்லை.  என் மாமியார்யிடம் புரோக்கர் பொண்ணுகிட்ட பேசுங்கன்னு கொளுத்தி போட்டாரு. கிச்சனில் இருந்த என்கிட்ட மாமியார் வந்து பேசிட்டு இருந்தாங்க.. அப்பக் கூட,  இவங்க தான் என் மாமியார வர போறாங்கன்னு சத்தியமா நினைக்கலே. 



ப்ரொபைல் மட்டும் அவங்க போனவுடன்  பார்த்தேன் . கம்பெனி பற்றி கூகுளை கேட்க கூகிள் நிமிசத்தில் அனைத்தையும் காட்டியது. எல்லோரும் போனதும், உனக்குப் பிடிச்சிருக்கான்னு அப்பா கேட்டார். அவங்க அம்மா நல்லா பேசுனாங்கப்பான்னு மட்டும் சொன்னேன்.  அம்மா Election Dutyமுடிஞ்சி வந்தாங்க. 

The next Day…

ஒரு மாலை இளவெயில் நேரம்… எங்க அம்மா ஆபீஸ் ஒருமணி நேரம் பெர்மிஷன் போட்டு விட்டு வீட்டுக்கு வர, அம்மா, அப்பா, தம்பியுடன் மாப்பிள்ளை வீட்டுக்கு்ப போாங்க முன்பாக வந்து கிளம்பி போனாங்க . அப்பா அம்மாக்கு இவரை பார்த்தவுடன் புடிச்சிருச்சு. என்னவர் அவ்வளவு அமைதியா இருந்தாராம்.

ஜாதகம் பொருத்தம் இருந்தால் மேற்கொண்டு பேசுறோம்ன்னு சொல்லிட்டு வந்தாச்சு. அப்புறம் ஜாதகம் பார்க்க ரெண்டு நாள் எடுத்துக்கிட்டாங்க. ஜாதகமும் பொருந்தியது. மாப்பிள்ளை நேரா வந்து பார்த்தோன பேசலாம்ன்னு சொன்னாங்க. 

Apr 29..

"மன்னவர்" என்னைப் பார்க்க வராருன்னு சொன்னவுடன்  ரொம்ப டென்ஷன். நோ புடவைனு முடிவு பண்ணிட்டேன். அன்னைக்கு நார்மல் சுடிதார் போட்டாச்சு. இந்த முறை ஜன்னல் வழியா பாக்கலாம்னு Try செய்து சரியாக தெரியவில்லை. மாப்பிள்ளை வந்தாரு. ஒரு 30 நிமிடம் பேசிட்டு போனாரு.

சினிமால வரமாதிரி நேரா பேசலை. எல்லார்கிட்டயும் பேசிட்டு இருந்தாரு. அவரு வாய்ஸ் கேட்டுச்சு , சரியாய் அவர் முகத்தை பாக்கல. அவங்க அம்மா கொடுத்த போட்டோ அன்னைக்கு எடுத்து பார்த்தேன்.

பழனிக்கு வந்த நடிகை சமந்தா.. மலைப்படியில் ஏறிச் சென்று முருகனை தரிசித்தார்


Apr 30.. 

தாத்தாவோடகு 30 ஆம் நாளுக்காக தாத்தா வீட்டுக்கு போனோம். மதியம் உணவு முடிந்ததும் அப்பா , பாட்டி, அத்தைகள், மாமாக்கள் , சித்தி சித்தப்பா அண்ணா அண்ணி பெரியப்பா பெரியம்மா, ஊரில் இருக்கும் பெரியவங்ககிட்ட எல்லாரையும் ஒன்றாக கூப்பிட்டு விஷயத்தை சொன்னாங்க. அங்க யார் எல்லாம் சந்தோஷப்பட்டாங்கன்னு தெரில.  யாரு இந்த செய்தி கேட்டு சந்தோசப்படுவாரோ அவர் இல்லை. அந்த தாத்தா போட்டோல இருந்து கேட்ருப்பாரு.

ஒரு வழியா நிச்சயதார்த்தம் முடிந்தது.. டிரஸ் வாங்கும் படலம் தொடங்கியது. மறுபக்கம், அவரது பேஸ்புக், டிவிட்டர் தேடிப் பார்த்தேன்.. கிடைக்கவில்லை. போன் நம்பர் கேட்ட வாங்கி மிஸ்ட் கால் கொடுத்தேன்.. பார்த்தா அது அவரோட அம்மா நம்பர். ஜெர்க் ஆகி விட்டேன் நான்.. பிறகு அவரே போன் பண்ணாரு. குரல் கேட்டதும், எனக்குள் பட்டாம்பூச்சி பறந்துச்சு. கோவில்ல மணி அடிச்சது.. இளையராஜா பாட்டு கேட்டுச்சு.. ஹலோன்னு சொன்னான ஒரு கம்பீரமான ஸ்வீட் மேன்லி வாய்ஸ்.. "மூர்த்தி பேசுறேன் பிஸியா"னு . நமக்கு டஜன் கணக்குல வழிஞ்சது.. "இல்லைங்க சொல்லுங்க எப்படி இருக்கீங்க"ன்னு கேட்க உங்கள்ட்ட பேசணும்ன்னு சொல்ல.. நானும் பேசணும், புடிச்சிருக்கானு கேட்க அங்க ஸ்டார்ட் ஆச்சுங்க..!

அப்புறம் சொல்லவா வேணும் பேசினோம் பேசினோம்.. பேசிட்டே இருந்தோம்.

May 4:

நிச்சயதார்த்தம் அன்றுதான் முதல் முறையாக என்னவரை நேரில் பார்த்தேன். சடங்குகள் இனிதே முடிந்தது.. my birthday the next day.. ஸோ ஹாப்பி பர்த்டே சொல்லிட்டு கிளம்பிட்டாரு. யாருக்கும் இப்படி கிடைக்காது. முதல் நாள் நிச்சயதார்த்தம்.. அடுத்த நாள் என் பிறந்த நாள். கண்டிப்பா வரணும்னு அன்பு கட்டளை போட்டாச்சு. என்னவர் பஸல வந்தாரு என் வண்டில அவரை கூட்டிட்டு போனேன். எங்க போறதுன்னு தெரில எனக்கு பிடிச்ச இடம் சாய் பாபா கோவில் அங்க போனோம். மனுஷன் சாமி கும்பிடமாட்டார். ஆனால்  அன்று எனக்காக கோவில் வந்தார். அப்புறம் ஒரு ஹோட்டல்ல சாப்பிட்டோம். அப்புறம் ஒரு பிலிம் , மொக்க படம் எதோ பாக்கணும்னு பாத்தாச்சு. அப்புறம் கிளம்பிட்டாரு .

தொடர்ந்து நிறைய பேச ஆரம்பித்தோம்.. இருவருக்கும் பிடித்தது.. வேலை.. நண்பர்கள்.. பொழுது போக்கு என எல்லாமும் பேசினேன். This made me love him ..(50%)

I will be happy when he is with me என்று realised.

நான் சினிமாட்டிக்கா யோசிப்பேன். அவரு practical ஆ திங்க் பண்ணுவாரு.. ஏணி வச்சாலும் ரெண்டு பேர் thoughts will be different..

அப்புறம் Register Marriage நடந்தது.. முடிஞ்சு வெளிநாடு கிளம்பினார் . Daily msgs, phone calls, skype.. இப்படியே 4 மாதம் ஓடியது. செப்டம்பரில் திருமணம். அதன் பிறகு அவருடன் வெளிநாட்டில் வாழ்க்கையை தொடங்கினேன். புது வாழ்க்கை.. சமையல் தெரியாது.. கத்துக்கிட்டேன். அவருக்காக நான் வெஜ் கத்துக்கிட்டேன்.. இன்று எல்லா வெரைட்டியும் சூப்பரா செய்றேன்.

9 வருடம் ஓடிருச்சு.. நிறைய கருத்து வேறுபாடுகள் சண்டைகள் வந்தாலும் அவர் இறங்கி வந்து விடுவார்.. பிரச்சினை ஈஸியா போய்டும். நாங்கள் டாம் ஜெர்ரி என்றாலும் கூட எதையும் எளிதாக அவர் சமாளித்து விடுவார். 

வெளிநாட்டில் இருக்கும் போது  எனக்கு அம்மை போட்டுச்சு. தனியா என்னை அப்படி கவனிச்சு பாத்துக்கிட்டாரு. வெளிநாட்டில் இருந்த அந்த நாட்கள் என்றும் என்னோட வசந்த காலம். அவர் கிட்ட பிடிக்காதது நெறைய இருக்கு (ஒன்று இல்ல பல இருக்கு). அதை அவரே சரி செய்துக்குவார்னு நம்பறேன். என் லவ்க்கு முன்னாடி அதெல்லாம் பெருசா தெரியல. i can only feel it. அவர்க்கிட்ட இருக்க நல்ல விஷயங்கள் எடுத்துப்பேன். நான் நிறைய surprise கொடுப்பேன். அவருக்கு அப்படி வராது, அதுக்காக பாசம் இல்லை என்று சொல்லமாட்டேன்.. நான் ஒன்னு நினைத்தால் அது கண்டிப்பா வாங்கித் தந்துருவாரு. 

நான் தனியா அவர்கூட நைட் லாங் டிரைவ் போகணும், தனியா சினிமாக்கு போகணும் என்று நினைப்பேன். குழந்தைகள் வந்த பிறகு அவர் பசங்ககூடபோகணும்னு நினைப்பாரு. பசங்க சந்தோசமா என்ஜாய் பண்ணுவாங்க..  

இது என் வாழ்கை , மறுபடியும் இந்த லைப் , இந்த கணவர் , பிள்ளைகள் அம்மா அப்பா , தம்பி , பிரண்ட்ஸ் திருப்பவும் வ ரமாட்டாங்க. இருக்கிற இந்த லைப் ஹாப்பியா சந்தோசமா இருக்கனும். பெண் மனம் விரும்புவது காசோ பணமோ அல்ல, தலை சாய்த்துக்கொள்ள ஒரு தோளும் நடந்ததெல்லாம் சொல்லி தீர்க்க ஒரு உறவும் தான்..!

கிடைத்த உறவுகளை பாசத்தை காதலை நேசிங்க.. முடிந்தவரை ஆழமா நேசிங்க.. அது போதும்!