மார்கழி 9 திருவெம்பாவை பாசுரம் 9.. முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருளே

Swarnalakshmi
Dec 23, 2024,05:16 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


மார்கழி 9 திருவெம்பாவை பாசுரம் 9.. முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருளே


திருவெம்பாவை பாசுரம் 9:


முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருளே

பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே

உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீர் அடியோம்

உன்னடியார் தாள் பணிவோம் அங்கு அவர்க்கே பாங்காவோம்

அன்னவரே எம் கணவர் ஆவார்

அவர் உகந்து சொன்ன பரிசே தொழும்பாய் பணி செய்வோம்

இன்னவகையே எமக்கு எம் கோன் நல்குதியேல்

என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய்.




பொருள் : 


பல கோடி வருடங்களுக்கு முன்பு தோன்றிய பழமையான விஷயங்கள் பலவற்றிற்கும் முன்பு தோன்றி பழமைக்கும் பழமையானவன் பரம்பொருளாகிய சிவ பெருமான். அவன் பழமையானவர் மட்டும் கிடையாது. புதுமைக்கு புதுமையாகவும் விளங்கும் சிவ பெருமானே உன்னை தலைவனாக கொண்ட நாங்கள், உன்னுடைய அடியார்களை மட்டுமே பணிந்து வணங்கிடுவோம். அவர்களுக்கே பணி செய்திடுவோம். உன் மீது பக்தி கொண்டர் மட்டுமே எங்களுக்கு கணவராக வர வேண்டும். அவர்கள் கூறும் வார்த்தைகளை எங்களுக்கு கிடைத்த பரிசாக கருதி பணி செய்வோம். எங்களின் இந்த பிரார்த்தனையை மட்டும் நீ ஏற்றுக் கொண்டு நிறைவேற்றினால், எங்களுக்கு எந்த குறையும் இல்லை என்ற நிலையை அடைவோம். இதை தவிர வேறு பரிசுகள் எதுவும் எங்களுக்கு வேண்டாம்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்