மார்கழி 7 - திருவெம்பாவை பாசுரம் 7.. அன்னே யிவையுஞ் சிலவோ பல அமரர்
- ஸ்வர்ணலட்சுமி
மார்கழி 7 - திருவெம்பாவை பாசுரம் 7.. அன்னே யிவையுஞ் சிலவோ பல அமரர்
திருவெம்பாவை பாசுரம் 7:
அன்னே யிவையுஞ் சிலவோ பல அமரர்
உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய் திறப்பாய்
தென்னாஎன் னாமுன்னந் தீசேர் மெழுகொப்பாய்
என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமும்
சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர் போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்.
பொருள் :
அம்மா! இதுவும் உன்னுடைய குணங்களில் ஒன்றா? தேவர்கள் உணர்ந்து அறிந்து கொள்ள முடியாதவனும், ஒப்பற்றவனும் பெருமைகள், சிறப்புகள் பலவற்றிற்கும் உடையவனாகிய நம்முடைய இறைவனை போற்றும் சங்கின் ஒலி கேட்டாலே, சிவ சிவ என்று வாயை ஓயாமல் சொல்லிக் கொண்டிருப்பாயே. தென்னாடுடையவன் என சொல்ல துவங்குவதற்கு முன்பே தீயில் இட்ட மெழுகு போல உள்ளம் உருகி, கண்களில் பக்தி கண்ணீராக பெருக்கி, எந்நாட்டவருக்கும் இறைவான போற்றி போற்றி கூறுவாயே. என்னுடைய பெருமைக்குரிய தலைவன், என்னுடைய அரசன், இனிமையானவன் என சொல்லிக் கொண்டி இருப்பாயே. இப்போது நாங்கள் பல விதங்களில் சிவனை பாடிக் கொண்டிருக்கிறோம்.
அதை நீ கேட்டாயாக. இதை கேட்டும் உன்னுடைய தூக்கத்தை விட மனம் இல்லையா? மனம் கல்லாக இருக்கும் இறைவனை உணரும் அறிவு இல்லாதவர்களை போல் இப்படி படுத்திருக்கின்றாயே. உன்னுடைய தூக்கத்தை என்னவென்று சொல்வது...உன்னை என்ன சொல்லு எழுப்புவது?
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்