மார்கழி 2 - மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை பாசுரம் 2

Swarnalakshmi
Dec 16, 2024,05:02 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


திருவெம்பாவை பாசுரம் 2 :


பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராாப்பகல் நாம்

பேசும்போ தெப்போதிப் போதா ரமளிக்கே

நேரமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்

சீ சி யிவையுஞ் சிலவோ விளையாடி

ஏசும் இடமீதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்

கூசும் மலர்ப்பாதந் தந்தருள வந்தருளுந்

தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்

ஈசனார்க் கன்பார்யா மாரோலோ ரெம்பாவாய்.




பொருள் :


பலவிதமான நகைகளை அணிந்த பெண்ணே, நாள் இரவும் பகலும் எப்போது பேசினாலும், எனது அன்புக்குரிய பெருமான் சிவ பெருமான் என்று கூவாய். ஆனால் இப்போது படுக்கையின் மீது பாசம் கொண்டு இன்னும் உறங்கிக் கொண்டிருக்கிறாயே என வீட்டிற்கு வெளியில் இருக்கும் தோழி கேலி பேசுகிறாள். அதற்கு வீட்டிற்குள் இருக்கும் பெண், அழகிய அணிகலன்களை அணிந்தவர்களே, கேலிப் பேச்சுக்கள் பேசி பொழுதை கழிப்பதற்கு இது நேரம் கிடையாது. வானவர்களுக்கும் கூட எளிதில் கிடைக்காத தன்னுடைய திருவடி மலர்களை நாம் பற்றிக் கொள்வதற்காக , நமக்கு அருள் செய்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறார். அனைத்து உலகங்களும் கொண்டாடும், சிவலோகத்தின் தலைவனும், தில்லை சிற்றலம்பலத்தில் ஓயாது நடனமாடுபவனும் ஆகிய ஈசனின் அடியவர்கள் நாம். அவரது புகழை பாடி, அருளை பெறுவதை விடுத்து, இப்படி பேசி விளையாடிக் கொண்டிருபப்து சரியல்ல என பதிலளிக்கிறாள்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்