மார்கழி 12 திருவெம்பாவை பாசுரம் 12.. ஆர்த்த பிறவித்துயர் கெட நாம் ஆர்த்தாடும்!

Swarnalakshmi
Dec 26, 2024,05:07 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


மார்கழி 12 திருவெம்பாவை பாசுரம் 12.. ஆர்த்த பிறவித்துயர் கெட நாம் ஆர்த்தாடும்!


திருவெம்பாவை பாசுரம் 12 :


ஆர்த்த பிறவித்துயர் கெட நாம் ஆர்த்தாடும்

தீர்த்தன் நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்

கூத்தன் இவ் வானும் குவலயமும் எல்லோமும்

காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி

வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார் கலைகள்

ஆர்ப்ப அரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்ப

பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்

எத்தி இருஞ்சுனை நீராடேலோர் எம்பாவாய்!




பொருள் :


இப்போது நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் பிறவியாகிய துன்பம் இனி மேல் நமக்கு ஏற்படாமல் தடுக்கும் வல்லகை கொண்டவர் கங்கையை தலையில் கொண்டவனும், சிறந்த தில்லை சிதம்பலத்தில் கையில் அக்னியுடன் ஓயாமல் ஆடிக் கொண்டிருக்கும் ஆடல் வல்லவனும், வானத்தையும் பூவுலகையும் மற்ற உலகங்களையும் காத்தும், படைத்தும், அழித்தும் விளையாடுபவனுமான தன்மை கொண்ட நம் சிவ பெருமான் மட்டுமே. அவரை நம் கரங்களிலுள்ள வளையல்கள் ஒலியெழுப்பவும், இடுப்பிலுள்ள ஆபரணங்கள் சத்தமிடவும், பூக்கள் பூத்திருக்கும் பொய்கையில் நீந்தி, கரையோறுவதை போல், இந்த பிறவி பெருங்கடலை நீங்கி, கரையேற, சிவாய நம என்னும் திருநாமத்தை சொல்லி, ஈசனின் பொற்பாதங்களை வணங்கி, முக்தி என்னும் பெரும் பேற்றை அடைந்திடுவோம்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்