மார்கழி 5 - ஆண்டாள் அருளிய திருப்பாவை.. பாடல் 5.. மாயனை மன்னு வட மதுரை மைந்தனை!

Swarnalakshmi
Dec 19, 2024,05:03 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


திருப்பாவை பாசுரம் 5 :


மாயனை மன்னு வட மதுரை மைந்தனைத்

தூய பெருநீர் யமுனைத் துறைவனை

ஆயர் குலத்தினில் தோன்றும் அணி-விளக்கைத்

தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்

தூயோமாய் வந்து நாம் தூ மலர் தூவித் தொழுது

வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க,

போய பிழையும் புகுதருவான் நின்றனவும்

தீயினில் தூசாகும் செப்பு ஏலோர் எம்பாவாய்.




பொருள் :


மாய செயல்களைச் செய்யும் கண்ணனை, வட மதுரையில் பிறந்த திருக்குமாரனை, பெருகியோடும் தூய்மையான யமுனை நதிக்கரையில் வசிப்பவனை, ஆயர் குளத்தில் விளக்கு போல் அவதாரம் எடுத்து யசோதைக்கு பெருமை தேடிக்கொடுத்த தாமோதரனை, பரிசுத்ததுடன் அணுகி மலர்களை தூவி வணங்கி , வாயாறப்பாடி நாம் நெஞ்சார தியானிப்போம். முற்பிறவியில் செய்த பாவங்களும் பின்வரும் பாவங்களும் அவன் அருளால் தீயில் விழுந்த பஞ்சாக உரு தெரியாமல் அழிந்து போகும். எனவே பகவான் கிருஷ்ணனின் நாமங்களைச் சொல்லி பாடி போற்றுவோம்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்