மார்கழி 20 ஆண்டாள் திருப்பாவை பாசுரம் 20 : முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
- ஸ்வர்ணலட்சுமி
மார்கழி 20 ஆண்டாள் திருப்பாவை பாசுரம் 20 : முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
திருப்பாவை பாசுரம் 20 :
முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் கவிர்க்கும் கலியே! துயிலெழாய்!
செப்பமுடையாய் திறலுடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்!
செப்பன்ன மென்முலைச் செவ்வாய் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டலோர் எம்பாவாய்.
பொருள் :
முப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் முன் சென்று பக்தர்களின் துயரத்தை போக்கி, காத்திடும் கலியுக தெய்வமே! நீ எழுந்திருக்க வேண்டும். பகைவர்களை நடுக்க வைக்கும் போர் திறம் கொண்ட தூயவனே தூக்கத்தில் இருந்து எழுந்திரு. பொற்கலசம் போன்ற மென்மையான ஸ்தனங்களையும், பவளம் போன்ற சிவந்த வாயையும், சிற்றிடையையும் கொண்ட நப்பினாய் பெண்ணே! லட்சுமிக்கு நிகரானவளே! துயில் எழுந்து வா. எங்களுக்கு விசிறி, கண்ணாடி போன்ற மங்கல பொருட்களை, உன்னுடைய கணவனாகி கண்ணனையும் தந்து இப்போதே எங்களை அருள் மழையில் நனைய செய்திடுவாயாக.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்