மார்கழி 17 ஆண்டாள் திருப்பாவை பாசுரம் 17 - அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்!

Swarnalakshmi
Dec 31, 2024,04:23 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


மார்கழி 17 ஆண்டாள் திருப்பாவை பாசுரம் 17 - அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்!


திருப்பாவை பாசுரம் 17 :


அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்

எம்பெருமான் நந்தகோபாலா! எழுந்திராய்

கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!

எம்பெருமாட்டி யசோதாய்! அறிவுறாய்! 

அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த

உம்பர்கோமானே! உறங்காது எழுந்திராய்

செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!

உம்பியும் நீயும் உறங்கலோர் எம்பாவாய்.




பொருள் :


ஆடை, உணவு என பிறரை திருப்திப்படுத்தும் அளவிற்கு தர்மம் செய்யும் எங்களின் தலைவரான நந்தகோபரே! தாங்கள் எழுந்தருள வேண்டும். கொடி போன்ற இடையை உடைய பெண்களுக்கு எல்லாம் தலைவியான இளகிய மனம் கொண்ட யசோதையே, மங்களகரமான தீபம் போன்ற முகத்துடன் பிரகாசிப்பவளே எழுந்து வர வேண்டும். விண்ணில் இருக்கும் தேவர்கள், உலகளந்த பெருமானுக்கு தாயாக இருக்கும் உன் திருவடிகளை தொழ  காத்திருக்கிறார்கள். எங்கள் தலைவனான கண்ணனே! நீ கண் விழிக்க வேண்டும். செம்பொன்னால் செய்த சிலம்புகளை அணிந்த திருமகளின் மணாளனே! நீயும், உன் தம்பியும் உறக்கத்தில் இருந்து எழுந்து எங்களுக்கு தரிசனம் தர வேண்டும்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்