நெல்லைன்னா.. அரிவாளும், அல்வாவும்தானா.. இதைப் பார்த்திருக்கீங்களா நீங்க!
Aug 04, 2023,03:07 PM IST
- மீனா
சாமி படத்துல ஒரு வசனம் வரும்..
"திருநெல்வேலில எனக்குப் பிடிச்சது அல்வா.. அதை விட அதிகமாக பிடிச்சது.. இந்த ஊர் பெண்களோட தைரியம்".. அப்படின்னு ஆறுச்சாமி விக்ரம் பேசுவார்.
ஆனால் திருநெல்வேலில இந்த இரண்டுக்கும் சற்றும் சளைக்காத இன்னொரு விசேஷம் இருக்கு.. அது என்ன தெரியுமா.. அதுதான் "சொதி"
அல்வா என்றாலே திருநெல்வேலிக்கு ஒரு அடையாளமாக சொல்வோம். ஆனால், அது மட்டும் இல்லாமல் இந்த சொதி குழம்பு இன்னொரு அடையாளமாக இன்றும் திகழ்கிறது. நெல்லையில் நடைபெறும் திருமண பந்திகளில் இந்த சொதி குழம்புக்கும் ஒரு முக்கிய இடம் உண்டு. அதுமட்டுமில்லாமல் இதனுடைய தனி சிறப்பே வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைக்கு சூப்பரான தீர்வு இது என்பதுதான்.
செரிமான பிரச்சனை, அல்சர் பிரச்சனை உள்ளவங்க இந்த குழம்பை வாரத்திற்கு ஒருமுறையாவது எடுத்துக் கொண்டால் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றத்தை உங்களால் உணராமல் இருக்கவே முடியாது. உணவே மருந்து என்ற கூற்றை உண்மையாக்கும் தன்மை இந்த சொதி குழம்புக்கு உண்டு. அதிக நாட்கள் மருந்து மாத்திரை சாப்பிட்டதனால் வயிறு மந்தமாக இருக்கிறது என்று கவலைப்படுகிறீர்களா. அப்ப இதை நீங்க முயற்சி செய்து பாருங்களேன்.
இந்த சொதி குழம்புக்கு "ஸ்ட்ரூ குழம்பு" என்று மற்றொரு பெயரும் உண்டு. இந்த குழம்பு பெரும்பாலும் காய்கறிகளைப் போட்டுத்தான் செய்வார்கள். ஆனால், இது நான்வெஜ் சேர்த்து செய்யும் போது இதனுடைய சுவை இன்னும் அருமையாக இருக்கும். அதை எப்படி என்று தான் பார்க்க போறோம் வாங்க பார்க்கலாம்.
செ���்முறை விளக்கம்:
முதலில் மூன்று இளசான தேங்காய்களை துருவி, பிறகு முதல் பால் திக்கான பாலாகவும், இரண்டாவது பால் சிறிது தண்ணீர் சேர்த்து, என இரண்டு விதமாக தனித்தனியே எடுத்துக் கொள்ள வேண்டும்.
சிக்கன் அல்லது மட்டன் நூறு கிராம் அளவில் எடுத்துக் கொண்டால் போதுமானது. மட்டன் என்றால் தனியாக வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
இரண்டு மீடியம் சைஸ் உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
25 கிராம் அளவிற்கு இஞ்சியை தோல் சீவி சிறியதாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
ஒரு கட்டு மல்லி இலைகளை தண்ணீரில் நன்கு அலசி அதை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
உங்கள் காரத்திற்கு ஏற்ப 20 முதல் 25 பச்சை மிளகாய்களை கீறி எடுத்துக் கொள்ளவும். இவ்வளவு மிளகாயா என்ற ஆச்சரியப்பட வேண்டாம். தேங்காய்ப்பாலில் செய்வதினால் இ தனுடைய காரம் மிகச் சிறிய அளவில் தான் நமக்கு தெரியும்.
முதலில் அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, சோம்பு இவற்றை போட்டு தாளிக்க வேண்டும். வெட்டிய வெங்காயத்தை இதில் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு இதனுடன் இஞ்சி, பச்சை மிளகாய், உருளைக்கிழங்கு என்று வரிசையாக ஒவ்வொன்றாக சேர்த்து, நன்கு கிளற வேண்டும். பிறகு கொஞ்சம் வதங்கியவுடன் நான் வெஜ்யையும் இதனுடன் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
சிறிது உப்பு, மஞ்சள் ����ூள் சேர்த்து வதக்கிய பிறகு அரைத்து வைத்திருக்கும் மல்லி இலையின் சாறை இதனுடன் சேர்த்து நன்கு கொதிக்கும் அளவிற்கு வேக விட வேண்டும். இவையெல்லாம் நன்கு வந்தவுடன் எடுத்து வைத்திருக்கும் முதல் தேங்காய்ப்பாலை இதில் ஊற்றி கிளற வேண்டும். இது கொதிப்பதற்கு முன்பே எடுத்து வைத்திருக்கும் இரண்டாவது தேங்காய் பாலையும் இதில் ஊற்றி கிளறி விட வேண்டும்.
அடுப்பை சிம்மில் வைக்க வேண்டும். இவையெல்லாம் நன்கு கலந்து நுரை கட்டி வரும்போது , இதுகூட ஒரு எலுமிச்சையின் சாறை ஊற்ற வேண்டும். அவ்வளவுதான் அடுப்பில் இருந்து இறக்கி வைத்து விட வேண்டும். இப்பொழுது நான்வெஜ் சொதி குழம்பு தயார்.
தேவையான பொருட்கள்:
தேங்காய்-3
மல்லி இலை- 1 கட்டு
உருளைக்கிழங்கு-2
பச்சை மிளகாய்-20 அல்லது 25
சிக்கன் அல்லது மட்டன்-100 கிராம்
வெங்காயம்-1 மீடியம் சைஸ்
எலுமிச்சை பழம்-1 மீடியம் சைஸ்
தாளிப்பதற்கு:
நல்லெண்ணெய்- தேவைக்கேற்ப
கடுகு -1 ஸ்பூன்
சோம்பு-1/2 ஸ்பூன்