இன்றைய தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை.. வெள்ளி விலையும் குறைவு!

Meenakshi
May 31, 2024,12:09 PM IST

சென்னை: கடந்த சில நாட்களாக உயர்ந்தும், பின்னர் குறைந்தும் நிலையற்ற தன்மையில் இருந்த தங்கம் இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இன்றும் உள்ளது. வெள்ளி விலை நேற்றைய விலையை விட இன்று குறைந்துள்ளது.


கடந்த சில நாட்களுக்கு முன்னர் உச்சம் தொட்டது தங்கம் விலை. அதன் பின்னர் சவரனுக்கு 2000 வரை குறைந்தது. அதன் பின்னர் மீண்டும் உயரத் தொடங்கியது. இவ்வாறு நிலையற்ற விலையில் தங்கம் விலை இருந்து வருகிறது. வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று தங்கம் விலை எந்த மாற்றமும் இன்றி, நேற்றைய விலையே இன்றும் தொடர்ந்து காணப்படுகிறது. 


நேற்று குறைந்து இருந்த விலையில் தான் இன்று தங்கம் விலை தொடர்கிறது. இந்த விலை வாடிக்கையாளர்களுக்கு சற்று மகிழ்ச்சி அளிப்பதாக வாடிக்கையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் விலையை பொருத்தே தங்கம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது என்பது நாம் அறிந்ததே.


சென்னையில் இன்றைய தங்கம் விலை...




இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6,730 ரூபாயாக உள்ளது.8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 53,840 ரூபாயாக உள்ளது. 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,342 ரூபாயாக உள்ளது. 8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.58,736 ஆக உள்ளது.


சென்னையில் வெள்ளி விலை...


நேற்று உயர்ந்திருந்த வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது. இன்று 1 கிராம் வெள்ளி விலை 1 ரூபாய்  குறைந்து ரூ.100க்கு விற்கப்படுகிறது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 800 ஆக உள்ளது. நேற்று ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1,01,000 இருந்த விலை இன்று ரூ.1,00,000க்கு விற்கப்படுகிறது. நேற்றைய வெள்ளியின் விலையில் இருந்து கிலோவிற்கு ரூ.1.000 குறைந்துள்ளது.