எனது வெற்றிக்கான காரணம் இதுதான் ... ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மானு சொன்ன சூப்பர் ரகசியம்!

Meenakshi
Jul 29, 2024,06:49 PM IST

பாரிஸ்:  பாரிசில் நடைபெற்று வரும் 2024ம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டியில் 10 மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டியில் மானு பாக்கர் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். தனது வெற்றிக்கான முக்கிய காரணமாக இருந்தது பகவத்கீதை தான் என்று கூறியுள்ளார்.


2024ம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டி பாரிசில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பெண்களுக்கான 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்தியாவை சேர்ந்த மானு பாக்கர் வெண்கல பதக்கம் பெற்றுள்ளார். துப்பாக்கி சுடுதல் பிரிவில் மானு பெற்ற பதக்கத்துடன் இந்தியா ஒலிம்பிக் போட்டியின் பதக்கப்பட்டியலில் இடம் பெற்றுள்ளது. 


மானு பாக்கர் அரியானா  உள்ள ஜாஜர் மாவட்டத்தில் கோரியா என்ற கிராமத்தில் பிறந்தவர். இவர் ஒரு சகலகலாவல்லி. அதாவது தனது 14 வயது முதல் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கவனம் செலுத்தி வருகிறார். தற்காப்பு கலை, பாக்சிங், டென்னிஸ், ஸ்கேட்டிங் போன்ற பல்வேறு பிரிவில் பயின்று பல்வேறு   போட்டிகளில் பங்கெடுத்து பரிசுகளை பெற்றுள்ளார். தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் மானு பாக்கர் வெற்றி பெற்றுள்ளார்.




அதன்பின்னர் துப்பாக்கி சுடுதலில் ஆர்வம் ஏற்பட்டு அதனை கற்று பல்வேறு பதக்கங்களை பெற்றுள்ளார். 2018ம் ஆண்டு நடந்த சர்வதேச துப்பாக்கி சுடுதல் மற்றும் காமன்வெல்த் போட்டிகளிலும் கலந்து கொண்டு பதக்கம் பெற்றுள்ளார். தனது 12 ஆண்டு போராட்டத்தின் உச்சமாக பானு பாக்கர் 2024ம் ஆண்டு நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் பெற்றுள்ளார். தனது 22 வது வயதில் பானு பாக்கர் பதக்கம் வென்று இந்தியாவை சேர்ந்த பெண் துப்பாக்கி சுடுதலில் வென்றி பெற்றுள்ளது இதுவே முதன்முறை என்ற  பெயரை பெற்றுள்ளார்.


தனது வெற்றி குறித்து பானு பாக்கர் கூறுகையில், டோக்கியோவில் 2020ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி கலந்து கொண்டு தோல்வியுற்ற போது மிகவும் மனம் உடைந்து போனேன். இருந்தாலும் நம்பிக்கையுடன் முயற்சி செய்தும் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. அப்போது தான் பகவத் கீதையை வாசிக்க தொடங்கினேன். பகவத்கீதையை பின்பற்றி  போட்டிகளில் கவனம் செலுத்த மனஉறுதி மிகவம் அவசியம் என்பதை அறிந்து, அதனை வளர்ந்துக் கொள்வதில் கவனம் செலுத்தினேன்.


பகவத் கீதையை நிறைய படித்தேன். கிருஷ்ணர் சொல்வதை போல, பலனை பற்றி சிந்திக்காமல், கடமை மீது கவனம் செலுத்துங்கள் என்ற வார்த்தையின் படி அதையே நானும் செய்தேன். பலன் என்ன என்பதை பற்றி யோசிக்காமல் நான் செய்ய வேண்டிய கடமையில் கவனமாக இருந்தேன். தற்போது நாட்டிற்காக வெண்கலம் வென்றதில் மகிழ்ச்சி அடைகின்றேன் என்று தெரிவித்துள்ளார்.