பாஜக - அதிமுக இடையிலான ரகசிய உறவு அம்பலமாகி விட்டது.. தங்கம் தென்னரசு
சென்னை: சட்டசபையில் 10 சட்ட மசோதாக்களை நிறைவேற்றும் தீர்மானம் மீதான வாக்கெடுப்புக்கு முன்னதாகவே அதிமுக வெளிநடப்பு செய்ததன் மூலம் அந்தக் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையிலான ரகசிய உறவு தொடர்பு அம்பலமாகியுள்ளது என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தைக் கூட்டிய திமுக அரசு, தமிழக ஆளுநர் திருப்பியனுப்பிய 10 மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றியது. இந்த தீர்மானம் சட்டப்பேரவையில் தனித் தீர்மானமானமாக ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. ஏற்கெனவே உள்ள மசோதாக்கள் எந்த மாற்றமுமின்றி நிறைவேற்றம் செய்யப்பட்டது.
சட்டசபைக் கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு. அவர் கூறுகையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலிந்து ஒரு காரணத்தை கண்டுபிடித்து நொண்டி சாக்கு காட்டிவிட்டு அவரும் அக்கட்சி உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்துள்ளனர், இவர்கள் வெளிநடப்பு செய்திருப்பது முழுக்க முழுக்க அரசியல்.
பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் இடையே இருந்த ரகசிய தொடர்பு தற்பொழுது வெளியாகியுள்ளது. பொய்யான காரணத்தை கூறி புரிந்து சொள்ளாமல் வெளியேறியுள்ளனர். நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன் நீ அழுவது மாதிரி அழு என்று செல்லி இருவரும் செயல்படுகின்றனர். பிஜேபி கூட்டணியில் இருந்து வெளி வந்தவர்கள் அவர்களை எதிர்த்து கேள்வி கேட்க கூட திராணி இல்லாமல் இருக்கின்றனர்.
ஏன் அந்த அம்மையார் பெரை வைக்கவில்லை என்று கூறக் கூட தைரியம் இல்லை. பிஜேபியுடன் இருக்கும் நட்பு தான் முக்கியம். எங்கே ஏதாவது சொல்லி விடுவார்களோ என்று நினைத்து வெளிநடப்பு செய்துள்ளனர். டெல்லியிலே இருப்பவர்கள் கோபித்து கொள்வார்களோ என்று நினைத்து அந்த பயத்தின் காரணமாக வெளிநடப்பு செய்து விட்டனர். பூனைக்குட்டி வெளிவந்து விட்டது என்று சொன்னால் கூட அவர்கள் யாருடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்பது தெளிவாக விளங்கியுள்ளது என்றார்.