என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்.. தமிழ் நிலத்தின் பெருமைகள்
- ஸ்வர்ணலட்சுமி
தமிழ் நிலம் (பண்டைய தமிழ்நாடு) உலகின் மிகப் பழமையான நாகரீகங்களில் ஒன்றை கொண்டுள்ளது. சங்க காலம் (கி.மு 300 -கி.பி 300) என்பது உலகின் மிகப் பழமையான இலக்கிய மரபுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. தமிழ் நிலத்தில் தோன்றிய சங்க இலக்கியங்கள் வீரம், ஏற்றம் ,காதல் ,பக்தி ,அறம் போன்ற வாழ்க்கை அம்சங்களை அழகாக பதிவு செய்துள்ளன.
தமிழ் நிலத்தின் பெருமைகளை பலவாறு கூறலாம் .தொன்மையும் வளமும் பண்பாடும் கொண்ட இந்த நிலம் உலகப் புகழ் பெற்ற மொழி, இலக்கியம் ,கலை வரலாறு என பலவற்றின் தாயகமாக விளங்குகிறது.
வரலாற்று பெருமை: தொன்மையான தமிழ் மன்னர்கள் அவர்களின் ஆட்சிகள் ,கலை, கட்டிடக்கலை, இலக்கியம் என பலவற்றையும் தமிழ் வரலாறு கொண்டுள்ளது.
சங்க இலக்கியங்கள் :தமிழ் இலக்கியத்தின் பொக்கிஷங்கள், சங்க இலக்கியங்கள், தமிழ் நிலத்தின் வளங்கள், பண்பாடுகள், மக்களின் வாழ்வியல் முறைகள் என பலவற்றை தன்னில் தமிழ் நிலம் கொண்டுள்ளது.
இலக்கியங்கள்: திருக்குறள் ,திருவாசகம், திருத்தொண்டர் புராணம் போன்ற பல இலக்கியங்கள் தமிழ் நிலத்தின் பெருமையை பறைசாற்றுகின்றன.
செழுமையான கலாச்சாரம்: சங்க இலக்கியங்கள், சாதி ,சமய வேறுபாடு இன்றி மக்கள் வாழ்ந்தமை ,கலை, இலக்கியம் ,இசை என பலவற்றையும் தமிழ் கலாச்சாரம் பிரதிபலிக்கிறது.
தமிழ் மண்ணில் பிறந்த பாரதியை பற்றி பார்ப்போம்
பாரதியார்.. "காணி நிலம் வேண்டும்- பராசக்தி காணி நிலம் வேண்டும் -அங்கு தூணில் அழகியதாய் நன்மாடங்கள்".... என்று பாடிய பாரதியார் பிறந்த மண் தமிழ் மண்தான் .அவர் திருநெல்வேலி மாவட்டத்தில் எட்டயபுரத்தில் 1882 ஆம் ஆண்டு பிறந்தார் .
வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே!
வானமளந்த தனைத்தும் அளந்திடும் வண் மொழி வாழியவே!..... தொல்லை வினை தரும் தொல்லை அகன்று சுடர்க தமிழ் நாடே! வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ் மொழியே!
இந்தப் பெருமை தமிழ் நிலத்திற்கே சொந்தம்.
திருவள்ளுவர்
ஈரடி குறளில் உலக தத்துவங்கள் அனைத்தையும் திருக்குறள் எனும் அற்புதப் படைப்பில் மக்களுக்கு எடுத்துரைத்தவர் திருவள்ளுவர். இவர் பிறந்தது கி.மு. 31ஆம் நூற்றாண்டு. இடம்- மயிலாப்பூர். இந்த பெருமை தமிழ் நிலத்திற்கு உண்டு. ஆதி ,பகவன் என்பது அவரது பெற்றோர். வாசுகி அவரது மனைவி. அவர் வள்ளுவர் குடியில் பிறந்ததால் வள்ளுவன் என்றும், அவர் உயர்ந்த கருத்துக்களை மனித சமுதாயத்திற்கு கூறியதன் காரணமாக "திரு "என்று அடைமொழியோடும் அவர் "திருவள்ளுவர்" என்று அழைக்கப்பட்டார்.
அறத்துப்பால் ,பொருட்பால், காமத்துப்பால் என்ற மூன்று பிரிவுக்குள் அடங்கிய 1330 குறட்பாக்கள் பல்வேறு உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது என்ற பெருமை தமிழ் நிலத்திற்கே சொந்தம்.
பரதநாட்டியம்
நம் தமிழ்நாடு பரதநாட்டியத்தின் பிறப்பிடமாக திகழ்கிறது. பரதநாட்டியம் என்பது தமிழ்நாட்டில் தோன்றிய ஒரு பாரம்பரிய நடன வடிவமாகும் .இது இந்தியாவின் பழமையான மற்றும் மிகவும் பிரபலமான நடன வடிவங்களில் ஒன்றாக சிறந்து விளங்குகிறது.
பட்டு: பட்டுப் புடவை வரலாற்றை எடுத்துக் கூறும் மாநிலம் காஞ்சிபுரம். பட்டு புடவை என்றாலே காஞ்சி பட்டு தான் நினைவுக்கு வரும். காஞ்சிபுரம் பட்டின் வரலாறு ஆனது இந்து புராணங்களில் இருந்து வருகிறது. காஞ்சிபுரத்தில் நெய்யப்படும் பட்டானது உலக புகழ் பெற்றதாக திகழ்கிறது. அனைத்து விசேஷங்களிலும், சுப காரியங்களிலும் பட்டின் பங்கு முக்கியமானது.
இத்தனை பெருமைமிகு தமிழ் நிலத்தின் அருமை பெருமைகளை அடுத்த கட்டுரையில் மேலும் விரிவாக பார்ப்போம்.. இணைந்திருங்கள் தென் தமிழுடன். உங்கள் ஸ்வர்ணலட்சுமி.