மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற.. மூக்குத்தி அம்மன் பார்ட் 2 படத்தின் பூஜை..!
சென்னை: பிரபல இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகும் மூக்குத்தி அம்மன் பார்ட் 2 படத்தின் பட பூஜை இன்று மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
கடந்த 2020 ஆம் ஆண்டு ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் மூக்குத்தி அம்மன் படம் ரிலீஸ் ஆகி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. அதிலும் இப்படத்தின் மூலம் அறிமுக இயக்குனரான ஆர்.ஜே பாலாஜி மற்றும் நயன்தாராவின் நடிப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மூக்குத்தி அம்மன் பாகம் 2 படத்தை இயக்க இருப்பதாக படக்குழு அறிவிப்பை வெளியிட்டது. அதேபோல் மீண்டும் மூக்குத்தி அம்மனாக நடிகை நயன்தாரா வலம் வர இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை மீண்டும் ஆர்.ஜே பாலாஜி இயக்குவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் வேல்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை பிரபல இயக்குனர் சுந்தர்.சி இயக்குகிறார். இதற்கிடையே மிக பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்திற்கான செட் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சுந்தர்.சி இயக்கத்தில் உருவாக உள்ள மூக்குத்தி அம்மன் பார்ட் 2 திரைப்படத்தின் பூஜை விழா இன்று சென்னையில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் இயக்குனர் சுந்தர்.சி, நடிகைகள் நயன்தாரா, மீனா, குஷ்பூ, ரெஜினா, யோகி பாபு உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். அப்போது மிகப் பெரிய அம்மன் சூலாயுதத்தை குஷ்பு வழங்க நயன்தாரா பெற்றுக் கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி ரசிகர்கள் பெரும் ஆதரவு அளித்து வருகின்றனர்.
100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக இருக்கும் மூக்குத்தி அம்மன் 2 படத்திற்கு முன்னதாக சுந்தர்.சி இயக்கத்தில் வடிவேலு நடித்துள்ள கேங்கர்ஸ் திரைப்படம் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.