நீ என்னை விரும்பிய தருணத்தில்.. நான் உணர்ந்த கனவுகளின் காவியமாக!

Su.tha Arivalagan
Mar 24, 2025,04:32 PM IST

- தேவி


பார்வைகள் பூக்களாக பூக்க ஆரம்பித்தது

வார்த்தைகள் ஓசையின்றி   நகர்ந்து சென்றது

மேக கூட்டங்கள் மகுடத்தை அணிவித்தது

மெல்லிசை ராகங்கள் காதுகளில் ஒலிக்க தொடங்கியது

நகத்தின் நுனிகளும் பேரழகாக தெரிய ஆரம்பித்தது

காதோரம் சினுங்கும் கரும் கூந்தலும் 

காதல் ராகங்களுக்காக ஏங்க தொடங்கியது

கரும் விழிகளும்

என்னை அழகு படுத்து என்று 

நச்சரிக்கத் தொடங்கியது

கிழிந்த ஆடைகளும் 

புதியது புதியது என்ற  மயக்கத்தை

கொடுக்க தொடங்கியது

வானில் பறக்கும் என்னை 

இசைக்கத் தொடங்கியது 

கால் கொலுசின் முத்து மணிகள் .....

உதட்டின் ஓரம் 




என்னைத் தொட்டு வை என்று 

கருமை பொட்டும்

கொஞ்ச ஆரம்பித்தது......

நடுவானில் ஊஞ்சலில் ஆடிக்கொண்டு 

கண்களை மூடிக்கொண்டு 

மனதினை இசைத்துக் கொண்டு 

பூத்துக் குலுங்கி சிரித்து மயங்க தொடங்கியது

மனதின் கனவு நிமிடங்கள் 

இத்தனை  அற்புதங்களும் 

நீ என்னை விரும்பிய தருணத்தில்

நான் உணர்ந்த  கனவுகளின் காவியமாக 

மனதினை உருக்கிய  கொண்டாட்டத்தின் வெளிப்பாடு!