10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்.. அரசுப் பள்ளிகள் அசத்தல்.. 1364 பள்ளிகளில் 100% தேர்ச்சி!

Manjula Devi
May 10, 2024,05:22 PM IST

சென்னை: பத்தாம் வகுப்பு பொது தேர்வு இன்று வெளியாகி உள்ளது. இதில் 91.55% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


தமிழ்நாடு முழுவதும் கடந்த மார்ச் 26 ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொது தேர்வு தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடந்து முடிந்தது. இந்தத் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 4,22,591 பேர் மாணவிகள் மற்றும் 3,96,152 மாணவர்கள் என மொத்தம் 8.94 லட்சம் மாணவ மாணவிகள் எழுதினர். இந்தத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளது.


இதில் மொத்தம் 8,18, 743 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 97.31% தேர்ச்சி விகிதத்துடன் அரியலூர் முதலிடத்தை பிடித்துள்ளது. அதேபோல் 97.02% தேர்ச்சி விகிதத்தில் சிவகங்கை இரண்டாவது இடத்தையும், 96.36% தேர்ச்சி விகிதத்தை பெற்று ராமநாதபுரம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.




பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 1,364 அரசு பள்ளிகளில் நூற்றுக்கு நூறு சதவீதம் தேர்ச்சி விகிதத்தை பெற்றுள்ளனர். அரசு பள்ளிகள் 87.90 சதவீதமும்,அரசு உதவி பெறும் பள்ளிகள் 91.77 சதவிகிதமும், தனியார் பள்ளிகள் 91.43 சதவிகிதமும், இருபாலர் பள்ளிகள் 91.93 சதவிகிதமும், பெண்கள் பள்ளியில் 93.80 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


கடந்த 2022 ஆம் ஆண்டு 90.7 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். இதனை தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு 91.39 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளை விட இந்த ஆண்டு 91. 55 சதவிகிதமாக தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. அதிலும் மாணவர்களை விட மாணவிகளே இந்த ஆண்டு அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


சென்டம் அடித்தோர்


தமிழகம் முழுவதும் தமிழில் 8 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 415 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களும், கணிதத்தில் 20, 691 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களும், அறிவியலில் 5,104 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களும், சமூக அறிவியலில் 4,428 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.