ஆசிரியர் தினம்: பூ கொடுத்து கொண்டாடிய தேவகோட்டை மாணவர்கள்!
Sep 05, 2023,05:00 PM IST
தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் உள்ள சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது .
ஆசிரியர் தின விழாவில் மாணவர்- மாணவிகள் ரோஜா பூ , பூங்கொத்து கொடுத்து ஆசிரியர் தின விழா வாழ்த்து தெரிவித்தனர்.
"ஆசிரியர் பணியே அறப்பணி" என்ற பழமொழிக்கேற்ப ஆசிரியர் பணி மிகவும் சிறப்பானது. ஒரு குழந்தைக்கு வெறும் கல்வியை மட்டுமே கற்றுக் கொடுப்பது என்பது ஆசிரியர் பணி கிடையாது.
நல்ல கல்வியை தாண்டி ஒரு குழந்தைக்கு ஒழுக்கம், நடத்தை ,பொதுஅறிவு, சுத்தம் ,அறிவு மற்றும் ஆன்மீகம் என எல்லாவற்றையும் கற்றுக் கொடுப்பதை ஆசிரியரின் சிறப்பான பணியாகும்.
அந்த ஆசிரியர் பணியை அறப் பணியாக நினைத்த சர்வப்பள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை (செப்டம்பர் 5 ) நாம் இன்று ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம்.
மேலும் தமது வாழ்க்கை மேம்பட உதவிய ஆசிரியருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்று அனைத்து பள்ளிகள் ,கல்லூரிகள் மற்றும் உலக நாடுகளில் ஆசிரியர் தின விழாவை மாணவ, மாணவிகள் சிறப்பாக கொண்டாடி மகிழ்கின்றனர்.
இந்த சிறப்புமிக்க ஆசிரியர் தின விழா இன்று தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர் சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஆசிரியர் முத்துலட்சுமி வரவேற்க, தலைமை ஆசிரியர்
லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். மாணவர்கள் அனைவரும் ஆசிரியர்களுக்கு வாழ்த்து அட்டை கொடுத்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர் . மேலும் ரோஜா பூ கொடுத்தும், இனிப்புகள் வழங்கியும் சிறப்பு செய்தனர்.