தமிழ்நாட்டில்.. இன்றும் நாளையும்.. பனியும் இருக்குமாம், வெயிலும் இருக்குமாம்.. வானிலை மையம் தகவல்!
சென்னை:தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் காலை வேளையில் பனிமூட்டமும், பிற்பகலுக்குப் பிறகு வெயிலும் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரமாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.தற்போது ஒரு சில இடங்களில் காலை வேளைகளில் மிதமான பனியுடன் பிற்பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. முழுமையான கோடை காலமே இன்னும் தொடங்கவில்லை. ஆனால், இப்போதே மக்கள் பழ சாறு, இளநீர், தர்பூசணி, மோர் போன்றவற்றை குளுமையான பொருட்களை நாடிச் செல்ல ஆரம்பித்து விட்டனர்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் இரண்டு நாட்களுக்கு வெயில் மற்றும் பனிப்பொழிவு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அதன்படி, தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும் நாளையும் பொதுவாக வறண்ட வானிலையே நிலவக்கூடும். ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
22.2.2025:
தமிழகம், புதுவை, மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலேயே நிலவக்கூடும். ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
23.2.2025 மற்றும் 24.2.2025:
தமிழகம், புதுவை, மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க கூடும்.
25.2.2025 மற்றும் 26.2.2025:
தமிழகம், புதுவை, மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலையே நிலவக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேலைகளில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 முதல் 33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 முதல் 23 டிகிரி செல்சியஸ் ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை வானம் ஓரளவு மிக மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 முதல் 33 டிகிரி செல்சியஸ் ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 முதல் 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்க கூடும் என தெரிவித்துள்ளது.