சென்னையில்.. இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு.. வெதர்மேன் கணிப்பு.. ஆனா வெயில் வெளுக்குதே!

Manjula Devi
Aug 26, 2024,03:11 PM IST

சென்னை:   சென்னையில் இன்று  மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.


அதேபோல் அடுத்த 24 மணி நேரத்தில் சென்னையில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையமும் தெரிவித்துள்ளது.




சென்னையில் கடந்த இரண்டு வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக காஞ்சிபுரம் திருவள்ளூர் சென்னை ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் தாக்கம் அதிகமாகவே இருந்து வருகிறது. இதனால்  பெரும்பாலான பகுதிகளில் வெப்ப சலனம் நிலவி வருகிறது. வெயில் காலம் ரிட்டர்ன் ஆயிருச்சோ என்று மக்கள் குழம்பிப் போகும் அளவுக்கு வெயில் அடிக்கிறது.


இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் சென்னை மழை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.  அதன்படி சென்னையில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் குஜராத்தில் இன்று முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு வெள்ளம் ஏற்படும் அளவிற்கு பெரும் மழை பெய்யக்கூடும்.


கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, ஆகிய மாவட்டங்களில் மழை குறைந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. அப்போது 37 டிகிரி வரை செல்சியஸ் வெயில் நிலவுகிறது. இதனால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு மழை இல்லை‌. தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பொலிவு இருக்கும். ஆனால் தமிழகத்தின் பிற பகுதிகளில் வறண்ட வானிலேயே நிலவும்.


வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்பகுதி வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து மேற்குவங்க கடற்கரை அதாவது அரபிக் கடல் பகுதிகளில் நுழைவதற்கு முன்பு குஜராத்தில் நிலை கொள்ளும்.இதன் காரணமாக குஜராத்தில் இன்று முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு இடைவிடாமல் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அப்போது காற்றழுத்த தாழ்வு பகுதி மெதுவாக நகர்ந்து பெரும் மழையை கொட்டி தீர்த்தால் குஜராத்தில் வெள்ளப்பெருக்கும் ஏற்படும். இதனால் அடுத்த மூன்று முதல் நான்கு நாட்கள் கனமழை பெய்வாய் கொள்ளதால், மக்கள் குஜராத்தில் பயணத்தை தவிர்க்கவும் வேண்டும் என தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்