வங்கக் கடலில்.. இன்று காற்றழுத்த தாழ்வு உருவாகும்.. 20 ஆம் தேதி வரை மழை.. வானிலை மையம் தகவல்
Dec 16, 2024,10:55 AM IST
சென்னை: வங்கக்கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் எனவும் இதனால் தமிழகத்தில் வரும் இருபதாம் தேதி வரை கனமழை தொடரும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த ஒரு வாரமாக பல்வேறு பகுதிகளில் பரவலாக கன மழை பெய்து வந்தது.ஆனால் நேற்று முதல் மழை குறைந்து வெயில் தலைக்காட்ட தொடங்கியது. இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வடிந்து பழைய நிலைமைக்கு வர தொடங்கியுள்ளது. என்னதான் வெயில் அடித்தாலும் சில்லென்ற காற்றும் வீசுவதால் தமிழ்நாடு முழுவதும் இதமான சூழல் நிலவுகிறது.
இதற்கிடையே தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் நேற்றே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த தாழ்வு பகுதியை உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இதனை அடுத்து இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் தமிழ்நாடு கடற்கரைப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தமிழ்நாட்டில் வரும் 20 தேதி வரை கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எதிர்பார்க்கப்படும் மழை நிலவரம்:
நாளை மிக கனமழை:
நாகை, மயிலாடுதுறை, கடலூர் திருவாரூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
நாளை கன மழை:
தஞ்சை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளது.
நாளை மறுநாள் மிக கனமழை (ஆரஞ்சு அலர்ட்):
விழுப்புரம், கடலூர், ஆகிய மாவட்டங்களில் நாளை மறுநாள் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மறுநாள் கன மழை:
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு காஞ்சிபுரம், மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்