Weather report: 6 மாவட்டங்களில் இன்று கன மழை.. 4 மாவட்டங்களில் நாளை மிக கன மழைக்கு வாய்ப்பு

Manjula Devi
Dec 17, 2024,05:45 PM IST

சென்னை: வங்க கடலில் நிலவிவரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று 6 மாவட்டங்களில் கனமழையும், நாளை 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரமடைந்து கடந்த சில வாரமாக பரவலாக கனமழை பெய்து வந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது மழையின் தீவிரம் குறைந்து ஒரு சில கடலோரப் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.


இந்த நிலையில் தெற்கு வங்கக்கடல் மத்திய பகுதிகளில் நேற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது இன்று தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் மையம் கொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த இரண்டு தினங்களில் மேலும் வலுப்பெற்று மேற்கு வட மேற்கு திசையில்  நகர்ந்து தமிழக கடற்கரை பகுதிகளை அடையும். இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் மூன்று நாட்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இன்று கனமழை: 




சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், உட்பட ஆறு மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.


நாளை மிக கனமழை ( ஆரஞ்சு அலர்ட்):


சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ஆகிய நான்கு மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


நாளை கனமழை: 


விழுப்புரம், கடலூர், ஆகிய இரண்டு மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


நாளை மறுநாள் கனமழை: 


சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம்,ஆகிய நான்கு மாவட்டங்களில் நாளை மறுநாள் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.


மிதமான மழை: 


தமிழகத்தில் 21ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் தெரிவித்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்